அறுவை சிகிச்சை காயங்களுக்கான காயத் துப்புரவு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து, பெரும்பாலான அறுவைச் சிகிச்சை காயங்கள் எந்த சிக்கல்களும் இன்றி இயற்கையாகவே ஆறக் கூடும். எனினும், தொற்றுகள், மற்றும் காய வெடிப்புகள் (பிளத்தல்) போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு தாமதிக்கப்பட்ட குணமடைதல் அல்லது காயம் சீர் குலைதல் போன்றவற்றுக்கு வழி வகுக்கும். நோய் தொற்று பாதித்த அறுவைச் சிகிச்சை காயங்கள் இறந்த (உயிரற்ற) திசுவை கொண்டிருக்கும். அறுவைச் சிகிச்சை காயங்களிலிருந்து உயிரற்ற திசுவை அகற்றுதல் (காயத் துப்புரவு) காயம் குணமடைவதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை காயங்களை துப்புரவு செய்வதற்கு அநேக வழிமுறைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வழிமுறையை பரிந்துரைக்க பற்றாக்குறையான செல்லுபடியாகும் ஆராய்ச்சி ஆதாரம் உள்ளது என இந்த திறனாய்வு காட்டுகிறது.

நோய் தொற்று பாதித்த அறுவைச் சிகிச்சை காயங்களிலிருந்து உயிரற்ற திசுவை அகற்றுவதற்கு எந்த வழிமுறை மிகவும் திறன் மிக்கதாக இருக்கும் என்பதற்கு அதிகமான ஆராய்ச்சி மிக தெளிவாக தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம்,ஸ்ரீகேசவன் சபாபதி.