பிளாஸ்மோடியம் வய்வக்ஸ் மலேரியா நோயாளிகளுக்கு மீண்டும் நோய் ஏற்படாமல் தடுக்க ப்ரைமாகுயின் சிகிச்சை

பிளாஸ்மோடியம் வய்வக்ஸ் ஒட்டுண்ணிகள் மூலமாக ஏற்படும் மலேரியா காய்ச்சல் பரவலாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு பிளாஸ்மோடியம் வய்வக்ஸ் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை இவ்வாறாக பரிந்துரைக்கிறது: இரத்தத்தில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்க மூன்று நாள் க்ளோரோக்யூன் சிகிச்சை. இதனை தொடர்ந்து, கல்லீரலில் உள்ள தொற்றை நீக்கி மீண்டும் மலேரியா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பதினான்கு நாட்களுக்கு ப்ரைமாகுயின் சிகிச்சை. ஆனால், பெரும்பான்மை நோயாளிகள் 3 நாட்கள் க்ளோரோக்யூன் சிகிச்சையின் நிறைவிலேயே உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பதால் மேலும் 14 நாட்களுக்கான ப்ரைமாகுயின் சிகிச்சையை முழுமையாக கடைபிடிப்பதில்லை. மேலும், G6PD குறைபாடு எனப்படும் மரபணு குறை உள்ளவர்களுக்கு ப்ரைமாகுயின் சிகிச்சையால் இரத்த சிவப்பனு அளவு குறையும் வாய்ப்புள்ளதால், G6PD குறைபாடு அதிகம் காணப்படும் பகுதிகளில் மருத்துவர்கள் பொதுவாக ப்ரைமாக்வின் சிகிச்சையை தவிர்க்கிறார்கள். ஆகவே, வழக்கமான 14 நாட்களைவிட குறுகிய கால ப்ரைமகுயின் சிகிச்சை அளிப்பதன்மூலம் இன்னும் அதிக நோயாளிகள் முழுமையான சிகிச்சையை கடைபிக்கவும், சிகிச்சையினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வில் வய்வக்ஸ் மலேரியாவால் பாதிகப்பட்ட 4377 பெரியவர்கள் மற்றும் ஒரு வயதிற்குமேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற 29 சோதனை ஆராய்சிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இரத்த நிலையில் மலேரியா தொற்று இருந்த இவர்கள் அனைவரும் முதலில் க்ளோரோக்யூன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின்னர், ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு ஒதுக்கீடு அடிப்படையில் வெவ்வேறு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு வழக்கமான பதினான்கு நாட்கள் ப்ரைமகுயின் சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு கீழ்கண்ட சிகிச்சைகளில் ஒன்று அளிக்கப்பட்டது: குறுகிய கால ப்ரைமகுயின் (மூன்று, ஐயிந்து, அல்லது ஏழு நாட்கள்); அல்லது அதிக அளவு ப்ரைமகுயின் வாரத்திற்கு ஒருமுறையாக எட்டு வாரங்களுக்கு; அல்லது மருந்தற்ற குளிகை; அல்லது சிகிச்சை ஏதும் அளிக்கப்படவில்லை. 12 சோதனை ஆராய்ச்சிகளில், சிகிச்சைகள் மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்பட்டன. 8 அக்டோபர் 2013 வரையிலான சோதனை ஆராய்சிகள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

14 நாள் ப்ரைமகுயின் சிகிச்சையை ஒப்பிடும்போது, குறுகியகால சிகிச்சைக்குப்பிறகு ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்க்குள் மலேரியா வியாதி மீண்டும் ஏற்படும் அபாயம் கூடுதலாக உள்ளது(மிதமான தர சான்று). மலேரியா நோய் மீண்டும் தாக்கும் தன்மையை குறைப்பதில் வாராந்திர ப்ரைமகுயின் சிகிச்சைக்கும், 14 நாள் ப்ரைமகுயின் சிகிச்சைக்கும் வேறுபாடு ஏதும் உண்டா என்று தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கூற இயலாது. இதற்கான அடிப்படை 126 நோயாளிகள் பங்குபெற்று, ஒன்பது மாதங்கள் பின்தொடர்ந்த ஒரே ஒரு ஆய்வு மட்டுமே(மிக குறைந்த தர சான்று). இந்த இரண்டு சிகிச்சைகளும் மலேரியா நோய் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதில் சமதிறனை கொண்டவைதானா என்று உறுதி செய்ய மேலும் நங்கு நடத்தப்பட்டு, அதிக நோயாளிகள் பங்கேற்கும் சோதனை ஆராய்ச்சிகள் தேவை. 5 நாட்கள் ப்ரைமாக்வின் சிகிச்சை, மருந்தில்லா குளிகை சிகிச்சை, சிகிச்சைஏதும் அளிக்கப்படவில்லை- ஆறு மாதம் முதல் 15 மாதங்களுக்குள் மீண்டும் மலேரியா நோய் ஏற்படுவதை தடுப்பதில் இவை அனைத்தும் பயனற்றவை என்று நான்கு சோதனை ஆராய்சிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டது (உயர்ந்த தர சான்று). மருந்தில்லா குளிகை சிகிச்சையைவிட 14 நாள் ப்ரைமகுயின் சிகிச்சையால் அதிக நோயாளிகள் 12 மாதத்திற்குள் மீண்டும் வய்வக்ஸ் மலேரியா ஏற்படாமல் பயனடைந்தனர் (உயர் தர சான்று). ப்ரைமகுயின் சிகிச்சையால் எந்தவிதமான தீவிர பக்கவிளைவுகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

வய்வக்ஸ் மலேரியா நோய் மறுபடியும் ஏற்படாமல் தடுக்க குறுகிய கால ப்ரைமகுயின் சிகிச்சையைவிட உலக சுகாதார அமைப்பினால் (WHO) பரிந்துரைக்கப்படுகின்ற 14 நாள் ப்ரைமகுயின் சிகிச்சை மிகவும் பயனுள்ளது என்று எங்களின் இந்த புதுப்பிக்கப்பட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெர்யர்ப்பு- தெற்காசிய காக்ரேன் [ஜாபெஸ் பால், ஆனந்த் விஸ்வநாதன்]

Tools
Information