மனச்சோர்விற்கான உடற்பயிற்சி

இந்த திறனாய்வு ஏன் முக்கியமானது?

மனச்சோர்வு உலகம் முழுவதும் 100 மில்லியன் மக்களை பாதிக்கும், ஒரு பொதுவான மற்றும் இயலாமை சார்ந்த நோய் ஆகும்.மனச்சோர்வு மக்களின் உடல் ஆரோக்கியத்தின் மேல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், அத்துடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கவும் செய்யும்.மருந்தாக்கியல் மற்றும் உளவியல் சிகிச்சைகள் ஆகிய இரண்டும் மனச்சோர்வை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.எனினும், பல மக்கள் மாற்று சிகிச்சைகளை முயன்று பார்க்க விரும்புகின்றனர்.சில, NHS வழிமுறைகள் உடற்பயிற்சியை ஒரு வேறுபட்ட சிகிச்சை தேர்வாக பயன்படுத்த முடியும் என்று பரிந்துரைக்கின்றன.இருந்தபோதிலும், மனச்சோர்விற்கு உடற்பயிற்சி ஒரு பயனுள்ள சிகிச்சை என்பதை உண்மையில் ஆராய்ச்சி காட்டுகிறதா என்று தெளிவாக தெரியவில்லை.

இந்த திறனாய்வில் யார் ஆர்வம் காட்டக் கூடும்?

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பத்தார்.பொதுமருத்துவ பயிற்சியாளர்கள்.மனநல கொள்கை வகுப்பாளர்கள்.மனநல சேவைகளில் பணிபுரியும் வல்லுநர்கள்.

இந்த திறனாய்வு எந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நோக்கம் கொண்டுள்ளது?

2010-லிருந்த முந்தைய காக்குரேன் திறனாய்வின் மேம்படுத்துதலாகிய இந்த திறனாய்வு, மனச்சோர்வின் அறிகுறிகளை உடற்பயிற்சி குறைக்க முடியும் என்று பரிந்துரைத்தது, ஆனால், அதன் விளைவு சிறியதாகவும் மற்றும் பங்கேற்பாளர்கள் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு நீடிப்பதாகவும் தோன்றவில்லை.

நாங்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க எங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில், எங்களது முந்தைய திறனாய்விற்கு பிறகு, மனச்சோர்விற்கான ஒரு ​சிகிச்சையாகிய,​உடற்பயிற்சியின்​ விளைவுகளை அறிய, அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை அறிய விரும்பினோம்.

சிகிச்சையின்மையை காட்டிலும் உடற்பயிற்சி, மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதா?மனச்சோர்வு நீக்க மருந்துகளைக் காட்டிலும் உடற்பயிற்சி, மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதா?உளவியல் சிகிச்சைகள் அல்லது மற்ற மருந்தற்ற-மருத்துவ சிகிச்சைகளை காட்டிலும் உடற்பயிற்சி, மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதா?மனச்சோர்விற்கான சிகிச்சையாக உடற்பயிற்சி, எவ்வாறு நோயாளிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?

இந்த திறனாய்வில், எந்த ஆய்வு படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன ?

18 வயதுக்கு மேல் வயதுள்ளவர்களில், உடற்பயிற்சி மனச்சோர்விற்கு எப்படி பயனுள்ளதாக உள்ளதென்று ஆராய்ந்த அனைத்து உயர் தரமான கட்டுப்படுத்தப்பட்ட சமவாய்ப்பு சோதனைகளைக் கண்டுபிடிக்க தேடல் தரவுத்தளங்களைக் நாங்கள் பயன்படுத்தினோம். மார்ச் 2013 வரை வெளியிடப்பட்ட ஆய்வுகளைத் நாங்கள் தேடினோம்.மார்ச் 2013-ல்தொடர்கின்ற ஆய்வுகளையும் நாங்கள் தேடினோம். அனைத்து ஆய்வுகளும், மனச்சோர்வு ஆய்வுறுதி கொண்ட வயது வந்தவர்களை உள்ளடக்கியதாயும் , மற்றும் மேற்கொள்ளப்பட்ட உடல் செயல்பாடு உடற்பயிற்சிகான சொற்பொருள் விளக்கத்தோடு பொருந்துவதாயும் இருக்க வேண்டும்.

மொத்தம் 2326 பங்கேற்பாளர்களைக் கொண்ட 39 ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம்.திறனாய்வு மதிப்பீட்டாளர்கள், சில ஆய்வுகளின் குறைவான தரம் ஆய்வு முடிவுகளின் மேலுள்ள நம்பிக்கையைக் வரம்பிற்குள்ளாக்குகிறது என்று குறிப்பிட்டனர். உயர்தரமான சோதனைகளை மட்டும் சேர்த்த போது, மனநிலையின் மேல் புள்ளியியல் முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறிய விளைவை மட்டுமே உடற்பயிற்சி கொண்டிருந்தது.

இந்த திறனாய்வில் உள்ள ஆதாரம் நமக்கு என்ன சொல்கிறது?

சிகிச்சையின்மையைக் காட்டிலும் உடற்பயிற்சியானது மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் மிதமான அளவில் அதிக பயனளிக்கிறது.முடிவுகள் சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், மனச்சோர்வு நீக்க மருந்துகளைக் காட்டிலும் உடற்பயிற்சியானது, மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் எந்த பயனையும் அளிக்கவில்லை.முடிவுகள் சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகளை அடிப்படையாக கொண்டிருந்த போதிலும், உளவியல் சிகிச்சைகளைக் காட்டிலும் உடற்பயிற்சியானது, மனச்சோர்வின் அறிகுறிகளை குறைப்பதில் எந்த பயனும் அளிக்கவில்லை.உயர்-தரமான ஆய்வுகள் மட்டும் சேர்க்கப்பட்டபோது உடற்பயிற்சி மற்றும் சிகிச்சையின்மைக்கும் இடையான வித்தியாசம் அறுதிக் குறைவாக உள்ளது என்று திறனாய்வு மதிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உடற்பயிற்சி சிகிச்சைகளுக்கான வருகை விகிதம் 50 % முதல் 100% வரை இருந்தது. மனச்சோர்விற்கான உடற்பயிற்சி வாழ்க்கை தரத்தை உயர்த்துமா ​என்பதிற்கு முடிவுறாத ஆதாரம் உள்ளது.

அடுத்து என்ன நிகழ வேண்டும்?

மனச்சோர்வு கொண்ட மக்களுக்கு, எவ்வகையான உடற்பயிற்சி வகைகள் நன்மையளிக்க முடியும், மற்றும் எவ்வித உடற்பயிற்சி அமர்வுகளின் எண்ணிக்கை மற்றும் கால அளவு மிகவும் நன்மையளிக்க முடியும் என்பதை வருங்கால ஆய்வுகள் இன்னும் விரிவாக பார்க்க வேண்டும் என்று திறனாய்வு மதிப்பீட்டாளர்கள் பரிந்துரைக்கின்றனர். உடற்பயிற்சி மனச்சோர்வு நீக்க மருந்துகள் அல்லது உளவியல் சிகிச்சைகள் போன்றவற்றை போல் பயனுள்ளதா என்பதை கண்டுபிடிக்க பெரியளவிலான சோதனைகள் மேன்மேலும் தேவையாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information