கீல்வாதத்திற்கு அசிட்டமினோஃபென்

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை ஒப்பிடும்போது கீல் வாதத்திற்கு அடிட்டமினோஃபென் எவ்வளவு நன்றாக வேலை செய்யும்? மற்றும் அது பாதுகாப்பானதா?

நடுத்தரம் முதல் உயர் தரம் கொண்ட 15 ஆய்வுகள் திறனாய்வு செய்யப்பட்டன. அவை இன்றைய தேதியில் நமக்கிருக்கும் சிறந்த ஆதாரத்தை அளித்துள்ளன. இடுப்பு அல்லது முழங்காலில் கீல்வாதத்தல் பாதிக்கப்பட்ட 6000 பேரில் இந்த ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. மருந்தற்ற குளிகை (போலி மாத்திரை) அல்லது ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (NSAID கள்) எடுத்தவர்களுடன், ஒரு நாளுக்கு 4000 மிகி ஆசிட்டமினோபன் (acetaminophen) (டைலனோல், பாரசிட்டமால்) எடுத்தவர்களுடன் இந்த ஆய்வுகள் ஒப்பிட்டன. சராசரியாக 6 வாரங்களில் இந்த ஆய்வுகள் முடிவுபெற்றன.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் எந்த எந்த மருந்துகள் சிகிச்சைக்கு அளிக்கப்படுகிறது?
கீல்வாதம் என்பது, கைகள், இடுப்பு, தோள்கள் மற்றும் முழங்கால்களை பாதிக்கும் மிகச் சாதாரணமாக காணப்படும் வாத வடிவம் ஆகும். இந்த மூட்டுவாதத்தில் மூட்டுஅமைப்பில் ஈடுபடும் எலும்புகளின் முனைகளை பாதுகாக்க முனைகளின் பாதுகாக்கும் குருத்தெலும்பு (Cartilage) சேதமடைந்து வலி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றது. கீல்வாததிற்கு இரண்டு முக்கிய மருந்துவ சிகிச்சை வகைகள் உள்ளன: அசிட்டமினோஃபென் (acetaminophen) வலியை குறைப்பதற்கு பயன்படுத்துவர். ஆனால் அவை வீக்கத்தை பாதிக்காது; ஐபுப்ரூஃபன்,டைகளோபின்நாக் மற்றும் காக்ஸ் IIs (செலீகோசிப்) போன்ற NSAIDகளை வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தலாம். எந்த வகை சிகிச்சை சிறந்தது மற்றும் எது அதிக பக்க விளைவுகளை உண்டுபண்ணும் என்று சரியாக தெரியவில்லை: ஆக்டமினோபன் (acetaminophen) அதிக மருந்தளவு அளிப்பது வயிற்று புண்கள் போன்ற வயிற்றுக்குக் கோளாறுகளை உண்டுபண்ணலாம் மற்றும் NSAIDகள் வயிறு, சிறுநீரக அல்லது இதயம் பிரச்சனைகளை உண்டுபண்ணலாம்.

ஆராய்ச்சிகள் என்ன தெரிவித்தன?
அசிட்டமினோஃபென் (acetaminophen) னுடன் போலி சிகிச்சை ஒப்பிடும்போது
போலி மருந்து உட்கொண்டோரை விட ஆக்டமினோபன் (acetaminophen) உட்கொண்டடோர் வலி குறைவாக உணர்ந்தனர் (ஒய்வு, தூங்கும்போது, நடவடிக்கை மற்றும் பொதுவாக) மற்றும் ஒட்டுமொத்தமாக நன்றாக உணர்ந்தனர். வலி (வேறு ஒரு அளவுகோளில் அளக்கும்போது), உடற்சார்ந்த செயல்பாட்டு திறன் மற்றும் விறைப்புத்தன்மை ஒரே மாதிரியாக இருந்தது. • -போலிசிகிச்சை பெற்றவர்களை விட அசிட்டமினோஃபென் (acetaminophen) எடுத்தவர்கள் 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 4 புள்ளிகள் குறைவாக மதிப்பிட்டனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர்

Tools
Information