நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சை

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (க்ரானிக் அப்ஸ்டிரக்டிவ் பல்மொனரி டிசிஸ், சிஓபிடி) என்பது காற்று நுரையீரலுக்கு செல்வதை தடுக்கக் கூடிய ஒரு நாள்பட்ட நுரையீரல் நிலைமையாக வரையறுக்கப்படுகிறது. மூச்சுத்திணறல், இருமல், சோர்வு மற்றும் அடிக்கடி ஏற்படும் மார்பு தொற்று ஆகியவை இதன் அறிகுறிகளுள் அடங்கும். உலகளவில், ஆரோக்கியக் கேட்டிற்கு சிஓபிடி ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

நுரையீரல் மறுவாழ்வுத் திட்டங்கள் உடற்பயிற்சியை ஒரு முக்கியக் கூறாக ​ உட்கொண்டிருக்கிறது​; சில திட்டங்கள், மதிப்பீடு, கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் உணவுமுறை ஆலோசனை ஆகிய பிற தலையீடுகளைக் கொண்டிருக்கின்றன. சிஓபிடி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறைகளில் நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சை முக்கியமான ஒன்றாகும். இந்த திறனாய்வு, சிஓபிடி கொண்ட மக்களின் ஆரோக்கியம் தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தின் மேல் நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சையின் தாக்கத்தை வழக்கமான பராமரிப்பிற்கு எதிராக ஒப்பிட்டது. நாங்கள், 3822 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 65 ஆய்வுகளை சேர்த்தோம். சீரற்ற சமவாய்ப்பு முறையில், பங்கேற்பாளர்கள் நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சை​​யை ​பெறுவதற்கோ அல்லது வழக்கமான பராமரிப்பை ​பெறுவதற்கோ ஒதுக்கப்பட்டனர். ஆய்வுகளின் தரம் பொதுவாக நன்றாக இருந்தது.

நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சை சிஓபிடி கொண்ட மக்களின் ஆரோக்கியம்-தொடர்புடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது என்று இந்த திறனாய்வு முனைப்பாகக் கூறுகிறது. சிஓபிடி கொண்ட நோயாளிகளில் நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சையை, மேலாண்மை​ மற்றும் சிஓபிடி கொண்ட ​நோயாளிகளுக்கான ​ சிகிச்சையின் ​ பகுதியாக சேர்ப்பதை முடிவுகள் வலுவாக ஆதரிக்கின்றன.

எதிர்கால ஆய்வுகள், திட்டத்தின் சிறந்த காலஅளவு, தேவையான பயிற்சி தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் திட்டத்தின் நன்மைகள் நீடிக்கும் போன்ற நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சையின் மிக முக்கிய கூறுகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information