ஒரு கர்ப்பிணி பெண், பிரசவ வலி நிவாரணத்திற்கு ஒப்பியேட் மருந்துகளை (உதாரணத்திற்கு: பெத்தடின், மார்பின் மற்றும் பிற அதே மாதிரியான மருந்துகள்) பயன்படுத்தும் போது, பிறந்த பச்சிளங் குழந்தையின் சுவாசம் அல்லது இதயத் துடிப்பு குறையத் தொடங்கும். அத்தகைய பச்சிளங் குழந்தைகளுக்கு உதவ, ஒப்பியேட் விளைவுகளை சமன் செய்யும் நாலோக்சன் என்னும் ஒரு மருந்து பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் பிரசவ வலி நிவாரணத்திற்கு ஒப்பியேட் மருந்துகளை பயன்படுத்திய பிறகு பிறந்த குழந்தைகளுக்கான சுவாச உதவி அல்லது புதிதாய் பிறந்த குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கான அனுமதி ஆகியவற்றை நாலோக்சன் குறைத்தது என்பதற்கு இந்த திறனாய்வு எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்