குறைகாலபிறப்பு அல்லதுதாழ் பிறப்பு எடைக் குழந்தைகளுக்கு உண்டாகும் திறந்த தமனி நாளம் சிகிச்சைக்கு (PDA) அல்லது இரண்டிற்கும்) ஐபுப்ரூஃபன் (ibuprofen)

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

திறந்த தமனி நாளம் (PDA) உடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பாக நாளம் மூடுவதற்கும் அதன் சீர்ப்படுத்து விகிதத்தை மற்றும் மற்ற முக்கிய மருத்துவ விளைவுகளை மேம்படுத்த ஐபுப்ரூஃபன் பயனை இண்டோமேதசின்(indomethacin), மற்ற நீர்நிங்கி-ஆக்சிஜனேஸ் தடுபான்கள் (cyclo-oxygenase inhibitors), மருந்துபோலி அல்லது எவ்விததலையீடின்மையுடன் ஒப்பிட்டும் போது பயன் உள்ளதா?

பின்புலம்

குறைகாலபிறப்பு அல்லது மிக சிறிய குழந்தைகளுக்கு உண்டாகும் ஒரு பொதுவான சிக்கல் பிடிஏ (PDA). பிடிஏ (PDA) நுரையீரல் மற்றும் இதயதிற்கு இடையே ஒரு திறந்த இரத்தக்குழல். அது பிறந்த பிறகு மூடிவிடும், ஆனால் சில நேரங்களில், குழந்தையின் வளர்ச்சி முதிராத நிலையில் அது திறந்தே இருந்துவிடும். பிடிஏ வாழ்க்கையை அச்சுறுத்தும் சிக்கல்கள் ஏற்படுத்தலாம். பெரும்பாலான குழதைகளில் வழக்கமான சிகிச்சை இண்டோமெத்தாசின் என்கின்ற மருந்து அளிக்கபடுகிறது. இது PDA வெற்றிகரமாக மூட உதவும், ஆகினும் இவை கடுமையான பக்கவிளைவுக்களை ஏற்படுதல்லாம். ஐபுப்ரூஃபன் மாத்திரை மற்றொரு வழி.

ஆய்வுகளின் பண்புகள்

நாங்கள் அறிவியல் தரவுத்தளங்களில் சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (மக்கள் தோராயமாக ஒன்றிலோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்களில் இருப்பர்) குறைப்பிரசவ (37 வாரங்களுக்கு குறைவாக பிறந்தோர்), குறைந்த பிறப்பு எடை (2500 கிராம்க்கும் குறைவான)சிசு அல்லது பிடிஏ உள்ள குறைப்பிரசவ மற்றும் குறைந்த பிறப்பு எடை சிசு ஆகிய ஆய்வுகளில் தேடினோம். இப்யூபுரூஃபன் இண்டோமெதேசின்,மற்றொரு சைகளோ-ஆக்சிஜனேஸ் மட்டுப்படுத்தி, மருந்துப்போலி அல்லது எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் இருத்தல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த ஆதாரம் மே 2014 நிலவரப்படியானவை.

முடிவுகள்

33 சோதனைகள்(2190 குழந்தைகள்) கொண்ட இந்த ஆய்வில் PDA மூட இண்டோமேதசின் போலவே ஐபுப்ரூஃபன் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் சிறுநீரகங்களில் குறைவான நிலையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் குடலை பாதிக்கும் ஒரு கடுமையான நிலை திசு இறப்பு குடல் அழற்சி (necrotising enterocolitis) ஆபத்தை குறைத்தன என்று கண்டறியப்பட்டது. ஐபுப்ரூஃபன் வளர்ச்சியில் ஏதேனும் முக்கிய நீண்டகால நன்மைகள் அளிக்கிறணவ என்பது தெரியவில்லை. இபுப்ரோபின்அல்லது இண்டோமேதசின் ஆகியவை திறந்த தமனி நாளம்(PDA) மூட தகுந்த மருந்து என்பதை முடிவு செய்ய கூடுதலாக 18 மாதங்கள் வயது மற்றும் பள்ளி நுழைவுவயது வரை நீண்ட கால பின்தொடர் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: நவீன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.