இசை சிகிச்சை, நடத்தை மற்றும் புலனுணர்வு பிரச்சனைகளை குறைத்து அல்லது சமூக மற்றும் உணர்ச்சி செயல்பாட்டை மேம்படுத்தக் கூடுமா என்பதை ஆராய்வதே குறிப்பிட்ட குறிக்கோள் ஆகும். முதுமை மறதி நோய் கொண்ட வயதான மக்களைக் குணப்படுத்துவதில் இசை சிகிச்சை பயனுள்ளது என்று இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள பத்து ஆய்வுகள் கூறுகின்றன. எனினும், இந்த சிறிய, குறுகிய-காலக் கட்ட ஆய்வுகளின் செயல்முறையியல் தரம், அதனுடன் அவற்றின் முடிவுகளின் அளிக்கை பொதுவாக மோசமானதாக இருந்தன. எந்த பயனுள்ள முடிவுகளும் பெறப்படவில்லை.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய்,ஸ்ரீகேசவன் சபாபதி.