மார்பக புற்றுநோய் சிகிச்சையைத் தொடர்ந்த நிணநீர் தேக்கத்திற்கு கைமுறையான நிணநீர் வடிகால் சிகிச்சை

பின்னணி

மார்பக புற்று நோயாளிகளில் ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான நிணநீர் தேக்கம் (breast cancer-related lymphedema, BCRL பிசிஆர்எல்) உருவாகும். BCRL என்பது, மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும்/அல்லது கதிரியக்க சிகிச்சை விளைவாக கை, மார்பு, அல்லது மார்பு சுவரில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். சௌகரியம், செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை BCRL எதிர்மறையாக பாதிக்கக் கூடும்.

கைமுறையான நிணநீர் வடிகால் (மனுவல் லிம்படிக் ட்ரைன்எஜ், எம்எல்டி) என்பது பிசிஆர்எல்-க்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு கைமுறை-சிகிச்சை முறையாகும், மற்றும் பெரும்பாலும், சிக்கலான அடைப்பு நீக்கும் சிகிச்சையின் (காம்ப்ளெக்ஸ் டிகன்ஜஸ்டிவ் தெரபி, சிடிடி) ஒரு பகுதியாகும். சிடிடி, எம்எல்டி, இறுக்கக் கட்டுகள், நிணநீர் குறைக்கும் பயிற்சிகள், மற்றும் தோல் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும்.

திறனாய்வு கேள்விகள்

எம்எல்டி, பிசிஆர்எல் சிகிச்சைக்கு பாதுகாப்பானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்குமா ?

ஆய்வு பண்புகள்

மே மாதம் 2013 மட்டும் வெளியான, மொத்தம் 208 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஆறு சோதனைகளை நாங்கள் கண்டோம்.

முக்கிய முடிவுகள்

தீவிர இறுக்கக் கட்டுகள் கொண்டு பெண்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவர்களின் வீக்கம் 30% முதல் 37% வரை குறைந்தது. எம்எல்டி, தீவிர இறுக்கக் கட்டுகளுடன் சேர்க்கப்பட்டது போது, அவர்களின் வீக்கம் மற்றொரு 7.11% வரை குறைந்தது. இவ்வாறாக, எம்எல்டி இறுக்கக் கட்டுகளுடன் சேர்க்கப்படும் போது நன்மை வழங்கலாம்.

இந்த கண்டுபிடிப்பை கூர்மையாக ஆராயும் போது, மிதமான முதல் கடுமையான வரை நிணநீர் தேக்கம் கொண்ட பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும் போது, லேசான முதல் மிதமான வரை நிணநீர் தேக்க வீக்கம் கொண்ட மக்களில் இந்த குறிப்பிடத்தக்க குறைவின் பயன் காணப்பட்டது. இவ்வாறு எங்களின் கண்டுபிடிப்புகள், லேசான முதல் மிதமான வரை பிசிஆர்எல் கொண்ட தனிநபர்கள் தீவிர இறுக்கக் கட்டுகள் சிகிச்சையோடு சேர்ந்த எம்எல்டியால் பயனடையலாம் என்று கூறுகின்றன. எனினும் இந்த கண்டுபிடிப்பு, மேற்படியான ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

பெண்களுக்கு, ஒரு வழக்கமான எலாஸ்டிக் இறுக்க உறையுடன் எம்எல்டி கொடுக்கப்பட்டு, மற்றும் ஒரு ஒரு வழக்கமான எலாஸ்டிக் இறுக்க உறையுடன், எம்எல்டி அல்லாத சிகிச்சை பெற்ற பெண்களுடன் ஒப்பிடப்பட்ட போது, கலவையான முடிவுகள் (சில நேரங்களில் எம்எல்டி ஆதரித்தும் மற்றும் சில நேரங்களில் எந்த சிகிச்சை ஆதரிக்காமலும்) ஏற்பட்டன.

வீக்கம் குறைந்த பிறகு, பங்கேற்பாளர்கள் ஒரு வழக்கமான உறையை தொடர்ந்து பயன்படுத்தினால் அவர்களின் வீக்கத்தைக் குறைவாக வைத்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஓராண்டு பின்-தொடர்தல் தெரிவிக்கிறது.

எம்எல்டி பாதுகாப்பானது மற்றும் நன்கு தாங்கக்கூடியது.

செயல்பாட்டிற்கு (இயக்க வரம்பு), கண்டுப்பிடிப்புகள் முரண்பட்டு உள்ளன, ஒரு சோதனை பயனுள்ளது என்றும் மற்றொன்று இல்லை எனவும் காட்டுகிறது. இரண்டு சோதனைகள் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டன, ஆனால், இரண்டுமே ஒரு சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுவை ஒப்பிட்டு கண்டுப்பிடிப்புகளை அறிவிக்கவில்லை, ஆதலால் முடிவுகள் நிச்சயமற்றதாய் உள்ளன.

எந்த சோதனையும் பராமரிப்பு செலவை கணக்கிடவில்லை.

சான்றின் தரம்

சோதனைகள் 24 முதல் 45 பங்கேற்பாளர்கள் வரை கொண்ட சிறியவையாக இருந்தன. பெரும்பாலான சோதனைகள் பங்கேற்பாளர்களை சீரற்ற முறையில் போதுமான அளவு ஒதுக்கீடு செய்திருந்தன. எனினும், நான்கு சோதனைகளில், வீக்கத்தை அளவிட்ட நபருக்கு பங்கேற்பாளர்கள் என்ன சிகிச்சை பெற்று கொண்டிருந்தனர் என்பது தெரிந்திருந்தது, மற்றும் இது முடிவுகளை ஒரு தலை சார்பாக ஆக்கியிருக்க முடியும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information