பக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்விற்கு சிகிச்சை தலையீடுகள்

மனச்சோர்வு நீக்கி மருந்துகள், பக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்விற்கு சிகிச்சையளிக்க பயன்படக் கூடும், ஆனால் அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். பக்கவாதத்திற்கு பின் மனச்சோர்வு மிக பொதுவானதாகும், மற்றும் அது மனச்சோர்வு நீக்கி மருந்து அல்லது உளவியல் சிகிச்சை கொண்டு சிகிச்சையளிக்கப்படும். மனச்சோர்வு நீக்கி மருந்துகள் மீட்சியை உண்டாக்கும் அல்லது மனச்சோர்வு அறிகுறிகளை மேம்படுத்தும் என்று 1655 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்த 16 சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. எனினும், அவை பக்க விளைவுகளையும் அதிகரிக்கும். பக்கவாதத்திற்கு பின் விடாப்பிடியான மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டுள்ள மக்களில், இந்த மருந்துகள் கவனத்துடன் பயன்படுத்தபடவேண்டும், ஏனென்றால் வலிப்புகள், கீழே விழுதல்கள், மற்றும் சித்தபிரமை போன்ற அபாயங்கள் பற்றி மிக குறைவாகவே அறியப்பட்டுள்ளது. உளவியல் சிகிச்சையின் பலன் பற்றி நாங்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை. மேற்படியான ஆராய்ச்சி, ஒரு பரந்த பக்கவாத நோயாளிகள் குழுவை உள்ளடக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information
Share/Save