குறைந்த பிறப்பு எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளில் நோயுற்ற நிலை மற்றும் இறப்பைக் குறைப்பதற்கு காங்காரு தாய்மை பராமரிப்பு

திறனாய்வு கேள்விகுறைந்த பிறப்பு எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளில் நோயுற்ற நிலை மற்றும் இறப்பைக் குறைப்பதற்குக் காங்காரு தாய்மை பராமரிப்பு உதவுமா?

பின்புலம் குறைந்த பிறப்பு எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளில் (< 2500 g), பாரம்பரியமான பச்சிளங் குழந்தை பராமரிப்பு அதிக பணச்செலவு கொண்டதாகும். மேலும் அதிக செயல்திறன் கொண்ட ஊழியர்கள் மற்றும் நிரந்தரமான ஏற்பாட்டியல் ஆதரவு இரண்டும் தேவைப்படும். குறைந்த பிறப்பு எடை கொண்ட பச்சிளங்குழந்தைகளுக்கு வழக்கமான பராமரிப்புக்கு மாற்றாக காங்காரு தாய்மை பராமரிப்பு முன்மொழியப்பட்டது. ஒரு தாய்க்கும், அவளின் புதிதாய் பிறந்த குழந்தைக்கும் தோலோடு-தோல் தொடர்பு (ஸ்கின்-டு- ஸ்கின் கான்டாக்ட்) என்பது கேஎம்சி-யின் ஒரு முக்கியமான கூறாகும். அடிக்கடியான மற்றும் பிரத்யேக அல்லது ஓரளவு பிரத்யேக தாய் பாலூட்டல் மற்றும் மருத்துவமனையிலிருந்து விரைவாக வெளியேறுவதற்கு முயற்சி செய்வது கேஎம்சியின் பிற இரண்டு கூறுகளாகும்.

ஆய்வு பண்புகள்2016 ஜூன் வரையிலான மருத்துவ தரவுத் தளங்களைத் தேடி 21 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை(3042 கைக்குழந்தைகள் கொண்டவை ) இந்த திறனாய்வுக்குச் சேர்த்தோம்.

முக்கிய முடிவுகள்பாரம்பரியமான பச்சிளங் குழந்தை பராமரிப்பை ஒப்பிடுகையில், காங்காரு தாய்மை பராமரிப்பு மருத்துவமனையிலிருந்து வெளியேறலின் போது, அல்லது மாதவிடாய் பின்னான 40-41 வாரங்களில் இறப்பைக் குறைத்தது. மற்றும் மிக சபீபத்திய பின்-தொடரலின் போது,கடுமையான தொற்று/ சீழ் பிடித்தல், மருத்துவமனை தொற்று/ சீழ் பிடித்தல்,ஹைபோதெர்மியா, கடுமையான உடல்நலக் குறைவு, கீழ் பகுதி மூச்சு தட வியாதி, மற்றும் மருத்துவமனை தங்கலின் கால நீளத்தை குறைக்கிறது என கண்டறியப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எடை, தலை சுற்றளவு, மற்றும் நீள அதிகரிப்பு,தாய் பாலுட்டல், பச்சிளங் குழந்தையில் பராமரிப்பு முறையில் தாயின் திருப்தி,தாய்- சேய் ஒட்டுதலின் சில அளவீடுகள் மற்றும் வீட்டு சூழல் ஆகியவற்றையும் கேஎம்சி அதிகரித்தது. சரி செய்யப்பட்ட ஒரு வருட வயதில், நரம்பியல்வளர்ச்சி மற்றும் நரம்பியல்தொடுவுணர்வு விளைவுகளில் எந்த வித்தியாசங்களும் இருக்கவில்லை.

ஆதாரத்தின் தரம் மிக முக்கியமான விளைவுபயன்கள் மிதமான-தரம் கொண்ட ஆதாரமாக இருந்தன.

முடிவுரைகுறிப்பாக, வளக்-குறைவான நாடுகளில், குறைந்த பிறப்பு எடை கொண்ட பச்சிளங் குழந்தைகளில் பாரம்பரியமான பச்சிளங்குழந்தை பராமரிப்பிற்கு ஒரு திறன்மிக்க மற்றும் பாதுக்காப்பான மாற்றாக காங்காரு தாய்மை பராமரிப்பு (காங்காரு மதர் கேர், கேஎம்சி) இருக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information