பெல்ஸ் பால்ஸிக்கு வைர செதிர்ப்பி சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

பெல்ஸ் பால்சிக்கு, வைரசெதிர்ப்பி சிகிச்சை தனியாகவோ அல்லது வேறு எந்த சிகிச்சையுடன் சேர்த்தோ அளிப்பதன் விளைவு பற்றிய ஆதாரங்களை மதிப்பாய்வு செய்தோம்.

பின்புலம்

பெல்ஸ் பால்ஸி என்பது முக நரம்பைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இந்நோய் முகத்தின் ஒரு பக்கத்தைச் செயலிழக்க செய்கிறது. சில இது சிற்றக்கி வைரஸ் தாக்கி வரக்கூடும் என்ற கூற்றை சில ஆய்வுகள் எடுத்துரைத்துள்ள. இந்த கூற்று சரியென்றால், வைரஸ்க்கு எதிரான வைர செதிர்ப்பி மருந்துகள் இந்த நோயிலிருந்து குணமடைய உதவியாக இருக்கும். பொதுவாக இந்த நோயால் ஏற்படும் முகத்தசைகளின் செயலிழப்பு தற்காலிகமானது, சிகிச்சையே இல்லாமல் குணமடைந்து விடும், என்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு நபர் நிரந்தரமான முகத்தோற்ற சிதைவு அல்லது வலியுடன் வாழ வேண்டியதாக இருக்கும். பெல்ஸ் பால்ஸிக்கு கார்டிகோஸ்டெராய்டுகள் திறன்வாய்ந்தவை என்பதை ஏற்கனவே ஒரு காக்ரேன் திறனாய்வு உறுதிச் செய்துள்ளது. இந்த திறனாய்வு 2001ல் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் அது பலமுறை திருத்தப்பட்டது. சமீபத்தில் 2009ல் இது புதுப்பிக்கப்பட்டது. இந்த வடிவம், காக்ரேன் நூலகத்தின் 7ஆம் வெளியீட்டில் அன்றைய நிலைக்குப் புதுப்பித்து சரிப்படுத்தப்பட்டு, சேர்த்து கொள்ளப்பட்ட ஆய்வுகளுள் ஒன்றின் தரவுகளின் மீதான நம்பகத்தன்மை பற்றிய விசாரணை நடைபெற்று வருவதால் திரும்பப்பெறப்பட்ட, ஒரு பதிவை மாற்றி அதற்குப் பதிலாக இடம்பெற்றுள்ளது.

ஆய்வு பண்புகள்

காரணம் அறியா, லேசான மிதமான, அல்லது கடுமையான ஒரு பக்க பெல்ஸ் பால்சி நோய் கொண்ட 2280 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்ட 10 ஆய்வுகளை நாங்கள் அடையாளம் கண்டோம். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 14 முதல் 84 ஆண்டுகள் வரையில் இருந்தது. இந்த ஆய்வுகள் வைர செதிர்ப்பியுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சேர்த்து அளிப்பதை கார்டிகோஸ்டெராய்டுகள் மட்டும் அளிப்பதுடனும்; வைர செதிர்ப்பி மட்டும் அளிப்பதை மருந்தற்ற குளிகை அல்லது எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுடனும்; வைர செதிர்ப்பி மட்டும் அளிப்பதை கார்டிகோஸ்டெராய்டுகள் சிகிச்சை மட்டும் அளிப்பதுடனும்; கார்டிகோஸ்டெராய்டுகள் சேர்க்கப்பட்ட வைர செதிர்ப்பி சிகிச்சை அளிப்பது மருந்தற்ற குளிகை அல்லது எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுடனும் ஒப்பிட்டன. ஆராய்ச்சிகளின் கால அளவு 3 முதல் 12 மாதங்கள் வரையில் இருந்தது.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

முழுமையற்ற மீட்டெழல்

கார்டிகோஸ்டெராய்டுகள் தனியே அளிப்பதை விட, வைர செதிர்ப்பியுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சேர்த்து அளிப்பது, பெல்ஸ் பால்ஸியிலிருந்து முழுமையற்ற நலம் பெறுதல் வீதங்களை மேம்படுத்தும் என்று குறைந்த தரமுள்ள ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த கண்டுபிடிப்பு பல்வேறு அளவுகளில் பெல்ஸ் பால்ஸியால் பாதிக்கப் பட்ட 1315 பங்கேற்பார்கள் கொண்ட 8 ஆய்வுகளின் அடிப்படையிலானது.

கடுமையான (severe) பெல்ஸ் பால்சி (முழு அல்லது ஏறக்குறைய முழு முக பக்கவாதம் கொண்டவர்கள்)சிகிச்சை விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய நான்கு ஆராய்ச்சிகளில் (478 பங்கேற்பாளர்கள்) இருந்து தரவுகளை எங்களால் பயன்படுத்த முடிந்தது. கார்டிகோஸ்டெராய்டுகள் சிகிச்சை மட்டும் அளிப்பதைவிட வைர செதிர்ப்பி சிகிச்சையுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சேர்த்து எடுத்துக்கொண்டவர்கள் குழுவில் முழுமையற்ற மீட்டெழல் மேம்பட்ட வீதங்களில் இருந்தது என்று முடிவுகள் கண்பித்தன . இந்த ஆதாரம் குறைந்த தரம் வாய்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.கார்டிகோஸ்டெராய்டுகள் சிகிச்சை மட்டும் அளிப்பதைவிட வைர செதிர்ப்பி சிகிச்சையுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சேர்த்து எடுத்தக்கொண்டவர்கள் குழு முழுமையற்ற மீட்டெழல் மேம்பட்ட வீதங்கள் இந்தது என்று கண்பித்தது. இந்த ஆதரம் குறைந்த தரம் வாந்தது என்பது கவனத்தில்கொல்ல வேண்டும்.

மேலும் பகுப்பாய்வில் நாங்கள் கீழ்க்கண்ட வற்றைக் கண்டோம்:

• முழுமையாக மீட்டெடுத்தலில் வைர செதிர்ப்பி மட்டும் அளிப்பது விட கார்டிகோஸ்டீராய்டுகள் தனியாக அளிப்பது திறனானது. (768 பங்கேற்பாளர்கள்);

கார்டிகோஸ்டீராய்டுகளுடன் வைர செதிர்ப்பி சேர்த்து அளிப்பது மருந்துப்போலி அல்லது எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் இருப்பதை விட திறன் வாய்ந்தது (658 பங்கேற்பார்கள்); மற்றும்

மருந்தற்ற குளிகையை விட வைர செதிர்ப்பி மட்டும் கொண்டு சிகிச்சை அளிப்பது குறைவான திரன் வாய்ந்தது (இருப்பினும், வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை) (658 பங்கேற்பாளர்)

பெல்ஸ் பால்சியின் நீண்ட கால பின்விளைவுகள்

மூன்று ஆய்வுகள் (941 பங்கேற்பாளர்கள்) பெல்ஸ் பால்ஸி வந்தபின் உண்டாகும் நீண்ட கால பின் விளைவுகளான, அதிகப்படியான கண்ணீர் உற்பத்தி மற்றும் சின்கைனசிஸ் (synkinesis) (எண்ணிய இயக்கம் செய்யும் அதே சமயத்தில் தன்னிச்சையற்ற தசை இயக்கம் ஏற்படுவது) பற்றி மதிப்பீடு செய்தன. பெல்ஸ் பால்ஸி வந்தபின் உண்டாகும் நீண்ட கால பின் விளைவுகளை கார்டிகோஸ்டெராய்டுகளுடன் வைர செதிர்ப்பி சேர்த்து அளிப்பது குறைத்தது. இதற்கான ஆதாரம் மிதமான தரம் கொண்டதாயிருந்தது.

வைர செதிர்ப்பி மட்டும் கொண்டு சிகிச்சை அளிப்பதைவிட கார்டிகோஸ்டெராய்டுகள் மட்டும் கொண்டு சிகிச்சை அளிப்பது பெல்ஸ் பால்ஸிக்கு பின் உண்டாகும் நீண்ட கால பின் விளைவுகளைக் குறைக்கும் (இரண்டு சோதனைகள், 472 பங்கேற்பாளர்கள்).

தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள்

மூன்று ஆய்வுகளிலிருந்து (1528 பங்கேற்பாளர்கள்) பெறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் எந்த சிகிச்சைகளும் பாதகமான நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காட்டவில்லை. இந்த விளைவுக்கான ஆதாரம் குறைந்த தரம் கொண்டது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்த ஆதாரம் அக்டோபர் 2014 நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. ஹரிஓம் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு