வயது வந்தவர்களில் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத்தை மேம்படுத்த மற்றும் மீட்டளிக்க செய்யும் சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பில், மக்கள் பாதுகாப்பாக மீண்டும் தங்கள் காலில் நிற்க மற்றும் நடக்க செய்வதில் நோக்கம் கொண்டுள்ளது. ஆரம்பக் காலங்களில், மக்கள் படுக்கையில் ஓய்வு பெற்று மற்றும் உடல் எடையை தாங்கி நிற்பதை கட்டுப்படுத்த கேட்கப்படலாம். பின்னர், உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் மறு நடைப் பயிற்சி உட்பட்ட நடை இயக்கத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு உக்திகளை, மருத்துவமனையில் தங்கியிருக்கும் போதும் மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறின பிறகும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக 65 ஆண்டுகளுக்கு மேலான வயது கொண்ட 1589 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 19 பரிசோதனைகளில் இருந்த சான்று இந்த திறனாய்வில் அடங்கும். போதுமற்ற பின்-தொடர்தல் உட்பட, அனேக சோதனைகளில் செயல்முறையியல் பலவீனங்கள் இருந்தன. எந்த இரண்டு சோதனைகளும் போதுமான அளவு ஒரே மாதிரியாக இருக்கவில்லை, ஆதலால் தரவு இணைக்கப்படவில்லை.

பன்னிரண்டு சோதனைகள் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு விரைவில் தொடங்கப்பட்ட தலையீடுகளை மதிப்பீடு செய்தன. இரண்டு-வார உடல் எடை தாங்கும் திட்டம், ஒரு குவாட்ரிசெப்ஸ் தசை வலுப்படுத்தும் உடற்பயிற்சி திட்டம், மற்றும் வலியை குறைப்பதற்கான மின் தூண்டல் ஆகியவற்றால் முறையே இயக்கம் முன்னேற்றமடைந்தது என்று ஒற்றை சோதனைகள் காட்டியது. ஒற்றை சோதனைகள், முறையே, ஒரு ஓடுபொறி நடை மறுபயிற்சி திட்டம், 12 வார எதிர்ப்பு பயிற்சி, மற்றும் 16 வார எடை-தாங்கும் உடற்பயிற்சி ஆகியவற்றால் இயக்கத்தில் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காணவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட நடமாட்டத்தை ஆய்வு செய்த ஒரு சோதனை முரண்பட்ட முடிவுகளை கண்டது. இரண்டு வாரங்களுக்கு எதிராக 12 வாரங்களில் எடை தாங்க ஆரம்பிக்கப்பட்டவை, அனுகூலமற்ற விளைவுகளில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் ஒரு வரலாற்று மிக்க சோதனை காணவில்லை. தீவிர இயன் முறை சிகிச்சை நியமங்களை மதிப்பீடு செய்த இரண்டு சோதனைகளில், ஒன்று, மீட்சியில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, மற்றொன்று, ஒரு உயுர்-நிலையான குழுவை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையை, அதிக தீவிர குழுவில் கண்டது. இரண்டு சோதனைகள், குவாட்ரிசெப்ஸ் தசை மின் தூண்டலை சேர்த்தது: ஒன்று, எந்த பலனையும் காணவில்லை மற்றும் குறைவான தலையீடு சகிப்புத்தன்மையை கண்டது; மற்றொன்று, இயக்கத்தில் முன்னேற்றம் மற்றும் நல்ல சகிப்புத்தன்மையை கண்டது.

ஏழு சோதனைகள், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு தொடங்கப்பட்ட தலையீடுகளை மதிப்பீடு செய்தன. வெளியேற்றப்பட்ட பிறகு வெகு விரைவில், இரண்டு சோதனைகள் முறையே, 12 வார தீவிர உடல் பயிற்சி மற்றும் ஒரு வீடு-சார்ந்த இயன்முறை சிகிச்சைக்கு பின்னர் மேம்படுத்தப்பட்ட விளைவை கண்டறிந்தது. பாரம்பரிய இயன்முறை சிகிச்சை முடிந்த பிறகு தொடங்கப்பட்ட தீவிர உடல் பயிற்சி, ஆறு மாதங்களுக்கு பிறகு விளைவுகளில் மேம்பட்டது என்று ஒரு சோதனை கண்டது. மற்றொரு சோதனை, ஒரு ஆண்டு உடற்பயிற்சி திட்டத்தால், நடவடிக்கை அளவுகள் முன்னேறியது என்று கண்டறிந்தது, பின்னர் மற்றொரு சோதனை, ஒரு வீடு-சார்ந்த எதிர்ப்பு அல்லது ஏரோபிக் பயிற்சியால் எந்த குறிப்பிடத்தக்க விளைவுகளையும் காணவில்லை. காயமடைந்த பின் சுமார் 22 வாரங்கள் பிறகு தொடங்கப்பட்ட வீடு-சார்ந்த பயிற்சிகள், விளைவை மேம்படுத்தியது என்று ஒரு சோதனை கண்டறிந்தது. ஏழு மாதங்களில் தொடங்கப்பட்ட வீடு-சார்ந்த எடை தாங்கும் பயிற்சிகள், இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று ஒரு சோதனை கண்டறிந்தது.

சுருக்கமாக, மருத்துவமனையில் அல்லது மருத்துவமனையிலிருந்து வெளியேறின பின், இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பின் மக்களை நடக்க வைக்க உதவுவதற்கு மற்றும் தொடர்ந்து நடக்க வைப்பதற்கு எவை சிறந்த உத்திகள் என்று தீர்மானிக்க போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.