வீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுபடுத்துவது ஆஸ்துமாவை மேம்படுத்துமா?

ஆஸ்துமா என்பது மூச்சு குழாய்களின் ஒரு நாட்பட்ட வீக்க நோயாகும். ஆஸ்துமா பரவலாக அதிகரித்துள்ளது மற்றும் இப்போது இது, குழந்தைகள் மத்தியில் மிக பொதுவான நாட்பட்ட நோயாக இருக்கிறது. ஒவ்வாமை ஊக்கிகளால் (ஒவ்வாமை எதிர்விளைவை ஏற்படுத்தும் பொருள்கள்)ஆஸ்துமா தூண்டப்படுகிறது மற்றும் ஆஸ்துமா கொண்ட சில மக்களில், வீட்டு தூசு ஒரு பிரச்சனையாக இருக்கும். வீட்டு தூசியில் உள்ள ஒரு முக்கிய ஒவ்வாமை ஊக்கி உண்ணிகளிலிருந்து வரும், மற்றும் வீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவது வீட்டு தூசி உண்ணிகளுக்கு கூர் உணர்வுடைய மக்களில் ஆஸ்துமாவை குறைக்கும் என்று கருதப்படுகிறது.

ஆஸ்துமா கொண்ட 3121 மக்களையுடைய 55 சீரற்ற சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். உண்ணி ஒவ்வாமை ஊக்கிகளின் அளவுகளைக் குறைப்பதற்கு, இரசாயன (10 சோதனைகள்) மற்றும் மெத்தை உறைகள் (37 சோதனைகள்) போன்ற இயற்பொருள் சார்ந்த இரண்டு முறைகள் உள்ளன மற்றும் இந்த இரண்டு வகைகளையும் இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். இயற்பொருள் சார்ந்த மற்றும் இரசாயன முறைகளை பயன் படுத்திய எட்டு சோதனைகள் இருந்தன. அநேக சோதனைகள் குறைந்த தரத்தை கொண்டிருந்ததால், அறிக்கையிடப்பட்டிருந்த விளைவு மிகைபடுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் சிகிச்சை தலையீடுகளின் விளைவை பற்றி எதுவும் காணவில்லை. உச்ச பாய்வு (நுரையீரல் செயல்பாட்டின் ஒரு அளவை), ஆஸ்துமா அறிகுறிகள், மற்றும் மருந்து மதிப்பெண் அல்லது தங்களின் ஆஸ்துமா அறிகுறிகளில் மேம்பாடுகளை அறிக்கையிடும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை.

வீட்டு தூசி உண்ணிகளுக்கு வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவது வழிகாட்டல்களில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், உண்ணிகளுக்கு அல்லது அதன் தயாரிப்புகளுக்கு வெளிப்படுத்துவதை குறைக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவை நாங்கள் காணவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information