கடும் முதுகு தண்டுவடகாயத்திற்கு இயக்க ஊக்கிகள்(ஸ்டிராய்டுகள்)

உலகளவில் முதுகு தண்டு காயத்தால் ஒவ்வொரு வருடமும் சுமார் நாற்பது மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இளம் வயது ஆண்கள். அதன் முடிவுகளும் பெரும்பாலும் படுமோசமாக அல்லது வருத்ததிற்குரியதாய் அமைகிறது நிரந்தர வாதத்தின் அளவினை குறைக்கும் முயற்சியில் பல்வேறு மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுக்கப் படுகின்றன. இதில் இயக்க ஊக்கிகளின் பயன்பாடு இதர மருந்துகளை காட்டிலும் அதிகமாக இருக்கலாம். இயக்கம் மேம்படுத்தல் மற்றும் இறப்பு விகிதம் குறைத்தல் ஆகியவற்றில் இந்த சிகிச்சையின் செயல் திறன் எவ்வாறு உள்ளது என்பதனைப் பரிசோதிக்கும் ஆய்வுகளை இந்த திறனாய்வு தேடியது. ஏறத்தாழ அனைத்து ஆராய்ச்சிகளிலும், ஏழு ஆராய்ச்சிகளிலும் , மெத்தில்ப்ரிடினிசோலன் எனும் ஒரே இயக்க ஊக்கியே (steroid) ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இயக்க ஊக்கிகளைக்கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையில் இயக்கம் மேம்படுத்தபடுகின்றது என்றும், ஆனால் இதனை காயமடைந்தயுடனேயே அதாவது எட்டு மணி நேரத்திற்குள்ளாக கொடுத்தாக வேண்டும் என்றும் ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன. மேலும் இந்த சிகிச்சை இருபத்திநாலு மணி முதல் நாற்பத்திஎட்டு மணி நேரம் வரை தொடரப்படவேண்டும். இம்மருந்து வெவ்வேறு அளவு விகிதத்தில் கொடுத்து சோதித்தபோது அதிக மருந்தளவு விகிதத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை செயல்திறம் மிக்கதாக இருந்தது. இருப்பினும் இச்சிகிச்சை இயல்பான இயக்கத்தை நோயாளிக்கு மீண்டும் தருவதில்லை. இயக்க ஊக்கிகள் மற்றும் சாத்தியமானால் இவற்றுடன் வேறு மருந்துகளும் சேர்த்து அளித்து அதிக அளவு ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:ந. தீபாமோகன்பாபு சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information