சாதாரண சளி மற்றும் மூச்சுமேற்சுவடு தொற்றுக்கு (upper respiratory tract) நுண்ணுயிர்க் கொல்லிகள்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மக்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சளி பிடிக்கிறது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் தவிர, பிறநாடுகளில் நுண்ணுயிர்க் கொல்லி பயன்பாட்டிற்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றாக ஜலதோஷம் கருதப்படுகிறது. மூக்கில் இருந்து வரும் சளி (தீவிரமான சீழ் மிக்க நாசியழற்சி) நிறம்மாறி இருந்தால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது. இருப்பினும், சாதாரண சளி நுண்ணுயிர்க் கொல்லிகளுக்குக் கட்டுப்படாத வைரஸ்களால் ஏற்படுகிறது. மேலும் நுண்ணுயிர்க் கொல்லிகள் வயிற்றுப் போக்கு போன்ற குறிப்பிடும்படியான பக்க விளைவுகளை உண்டுபண்ணலாம். நுண்ணுயிர்க் கொல்லியின் அளவுக்கு மீறிய பயன்பாடு பாக்டீரியாக்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளிடம் எதிர்ப்பினை உருவாக்கும்.

நுண்ணுயிர்க் கொல்லி சாதாரண சளிக்கு என்ன பயன் அளிக்கும் என்று அறிய நாங்கள் நுண்ணுயிர்க்கொல்லி எடுத்துக்கொண்ட ஒரு குழுவினை நுண்ணுயிர்க்கொல்லி இல்லாத ஆனால் அதுபோன்றதொரு மருந்து (மருந்துப்போலி) அடங்கிய மருந்துசிகிச்சை எடுத்துகொண்ட மற்றொரு குழுவோடு ஒப்பிட்ட ஆய்வுகளை நாங்கள் கண்டெடுத்தோம் . 791 கடுமையான சீழ்கொண்ட நாசியழற்சி நோயாளிகள் பங்குக் கொண்ட ஐந்து ஆய்வுகள் மற்றும் 1047 ஜலதோஷம் பாதித்தவர்களை கொண்ட ஆறு ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். நிறைய ஆராய்ச்சிகள் குறைபாடு கொண்டிருந்ததால் இந்த முடிவுகள் ஒருதலை சார்பிற்கான சாத்தியத்தை கொண்டிருந்தது. ஏனெனில் குறிப்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாமல் நிறைய பங்கேற்பாளர்கள் நெஞ்சு அல்லது சைனஸ் தொற்று உடையவர்களாக இருந்தனர்.

சளி மற்றும் கடுமையான சீழ்கொண்ட நாசியழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் உதவாது என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன மற்றும் இந்தனால் பலர் நுண்ணுயிர்க் கொல்லியினால் வரும் பக்க விளைவுகளால் பதிக்கபடலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information