போட்காஸ்ட்: வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு வழங்கல் மற்றும் சுய-பராமரிப்பு யுக்திகள்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை வலிப்பு நோய் தாக்குகிறது. அநேக சோதனைகள் மற்றும் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளின் மீதான திறனாய்வுகள் போக, அதிக சிக்கலான யுக்திகளை சோதித்த ஆய்வுகளும் உள்ளன. பிப்ரவரி 2016ல் ஒரு மேம்படுத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வில், யுகே பப்ளிக் ஹெல்த் வேல்ஸ்-விலிருந்து பீட்டர் ப்ராட்லி மற்றும் அவர் உடன் பணியாளர்கள் இவற்றின் மீதான ஆதாரத்தை கண்டனர். அவற்றை இந்த வலையொலியில் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து,  ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.