வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான பராமரிப்பு சிகிச்சை தலையீடுகளின் திறனிற்கான ஆதாரம் இன்னும் தெளிவற்றதாக உள்ளது.
வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களில் விளைவுகளை மேம்படுத்துவதில், செவிலிய வல்லுநர்கள் மற்றும் மேலாண்மை யுக்திகள் உள்ளடக்கிய ஒரு பரந்த சிகிச்சை தலையீடுகளின் திறனை இந்த திறனாய்வு ஒப்பீடு செய்தது. ஆதரவு அளிப்பதற்கு மாறுப்பட்ட அளவுகளிலான ஆதாரத்தை கொண்டிருந்த ஏழு தனித்துவ சிகிச்சை தலையீடு வகைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள், வலிப்பு நோய் செவிலிய வல்லுநர்கள் மற்றும் சுய-மேலாண்மை விளக்கக் கல்வியிலிருந்து சில நன்மையை காட்டிய போது, பிற சிகிச்சை தலையீடு வகைகளின் திறனிற்கு ஆதாரம் இல்லை. சில ஆய்வுகளின் மோசமான செயல்முறைகள் தரத்தினாலும், மற்றும் எங்கு நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து, தாக்கம் வேறுப்படும் சிகிச்சை தலையீடுகளின் சிக்கலான தன்மையினாலும், இது மேலும் கூட்டப்படுகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், வலிப்பு நோய் கொண்ட வயது வந்தவர்களின் பராமரிப்பில் எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சை தலையீட்டிற்கும் வாதாடுவதற்கு இயலாது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.