Skip to main content

வேலையிலுள்ள பெண்களில் தாய்ப்பால் ஊட்டுவதை ஆதரிக்கும் பணியிட சிகிச்சை தலையீடுகள்

பணியிடத்தில் உள்ள குறிப்பிட்ட திட்டங்கள், தாய்ப்பாலுட்டும் நேரத்தை அதிகரிக்க உதவும்என்று கூறும் எந்த சோதனைகளும் இல்லை.

தாய்ப்பால் ஊட்டுவது, தாய்மார்களுக்கும் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் பயனளிக்கும். எனினும், வேலை பார்க்கும் பெண்கள், பிள்ளை பேற்றிற்கு பின் பல்வேறு காரணங்களுக்காக சீக்கிரம் வேலைக்கு திரும்ப வேண்டி வரும். அவர்களின் பணி அமர்த்துனர்களால் ஆதரவளிக்கப்படவில்லையென்றால், அவர்கள் தங்களின் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்படலாம், பால் சுரப்பதிலும் மற்றும் சேமிப்பதிலும் சிரமம் கொள்ளலாம் மற்றும் தாய்ப்பாலூட்டுவதை செயலாற்ற முடியாமல் போகலாம். பெண்கள் பாலூட்டுவதை தொடர பணியிட திட்டங்கள் உதவக் கூடும், மற்றும் சில திட்டங்கள் பெண்கள் பாலூட்ட ஆரம்பிக்க உதவக் கூடும். பணி அமர்த்துனர்கள், திட்டங்களை மேம்படுத்தி மற்றும் ஆதரிப்பதின் மூலம் பாலூட்டும் நேரத்தின் (பிரத்தேயகமான பாலூட்டலையும் சேர்த்து) மேல் இயக்க விளைவை ஏற்படுத்தி அதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடும், அதே போன்று குறைந்த வேலைவராமைக்கும், உயர் ஆக்க வளத்திற்கும் மற்றும் அதிகரித்த பணியாளர் நடத்தை மற்றும் தங்கள் ஆகியவற்றுக்கும் பயனளிக்கக் கூடும். தங்களின் பிள்ளை பேற்றிற்கு பின் வேலைக்கு திரும்பும் பெண்களில், தாய்ப்பால் ஊட்டுவதை ஆதரிக்கும் பணியிட திட்டங்களை ஆராய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. இந்த முக்கிய பணியிட பொது நல சிகிச்சை தலையீட்டை மதிப்பிட்ட எந்த சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளும் கண்டறியப்படவில்லை. பிள்ளை பேற்றிற்கு பின் வேலைக்கு திரும்பும் பெண்களில், தாய்ப்பால் ஊட்டுவதை தொடர மற்றும் அதின் நேரத்தை, பிரத்தியேகத்தை ஆதரிக்க அல்லது ஊக்கப்படுத்த பணியிட திட்டங்களின் (காப்பகங்கள் மற்றும் மழலை பள்ளிகள் உட்பட) தாக்கத்தை நிறுவுவதற்கு சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Abdulwadud OA, Snow ME. Interventions in the workplace to support breastfeeding for women in employment. Cochrane Database of Systematic Reviews 2021, Issue 11. Art. No.: CD006177. DOI: 10.1002/14651858.CD006177.pub3.