Skip to main content

12 முதல் 17 வயதுடைய அதிக உடல் பருமனான குழந்தைகளுக்கான சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன், மற்றும் நடத்தைக்கான பங்கு.

திறனாய்வு கேள்வி

12 லிருந்து 17 வயதுடைய உடல் பருமனுடைய அல்லது எடை அதிகமான குழந்தைகளின் சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன் மற்றும் நடத்தை சார்ந்த தலையீடுகள் எவ்வளவு பயனுள்ளது?

பின்புலம்

உலகமெங்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடை கூடி பருமனாகின்றனர். இந்த குழந்தைகள், குழந்தை பருவத்திலும் மற்றும் எதிர்கால வாழ்க்கையிலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ளது. மேலும் எந்த சிகிச்சை இந்த பிரச்சனைக்கு சிறப்பாக உதவும் என்கின்ற விவரங்கள் தேவைப்படுகிறது.

ஆய்வு பண்புகள்

6 முதல் 11 வயது கொண்ட 8461 பருமனான அல்லது எடைக்கூடிய குழந்தைகள் பங்குபெற்ற 70 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் (இரண்டு அல்லது அதற்கும் மேலான சிகிச்சை குழுக்களில் சீரற்ற முறையில் மக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள்) நாங்கள் கண்டறிந்தோம். இதில் உணவு கட்டுப்பாடு முறைகளை ஒப்பிடுதல், உடல் இயக்க நடவடிக்கை மற்றும் பலவித கட்டுப்பாட்டு குழுக்களுடன் நடத்தை மாற்றும் சிகிச்சை முறைகளை (இதில் பழக்கம் மாற்றப்பட்டது அல்லது மேம்படுத்தப்பட்டது) ஒப்பிட்டது. 64 பல்கூறு மருத்துவமுறை சிகிச்சை முறைகள் கொண்ட ஆய்வுகள் கலவை முறையில் (பலவித உ்ணவு கட்டுப்பாடு மற்றும் உடற்சார்ந்த செயல்பாடுகள்) , நான்கு உடல் இயக்க நடவடிக்கை தலையிடுகள் மற்றும் இரண்டு உணவுத்திட்டம் தலையிடுகள், எந்த சிகிச்சயைையும் எடுக்காதவர்கள், வழக்கமான பராமரிப்பு, அல்லது சிகிச்சை குழுவில் வேறு எதோ ஒரு சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிட்டது. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில் உள்ள குழந்தைகள், ஆறு மாதங்கள் முதல் முன்று வருடங்கள் வரை கண்காணிக்கப்பட்டனர்.

முக்கிய முடிவுகள்

குழந்தைகளின் சராசரி வயது 10 ஆக இருந்தது. பல ஆய்வுகள், உடல் நிறை குறியீட்டெண் (BMI) z ஸ்கோரை பதிவு செய்தது. உடல் நிறை குறியீட்டெண் என்பது உடலின் கொழுப்பின் அளவை கணக்கிடுவதாகும், இது உடல் எடையை (கிலோ கிராமில்), மீட்டரில் அளவிடப்பட்ட உடல் உயரத்தின் இருபடி வர்க்கத்தால் வகுத்து மதிப்பிடப்படுகிறது (கிலோ கிராம்/மீட்டர் 2). குழந்தைகளில், உடல் நிறை குறியீட்டெண்ணை அடிக்கடியாக அளவிட அவர்களின் வளர்ச்சிகேற்ப குழந்தையின் பாலினம், எடை மற்றும் உயரம் ஆகியவை கணக்கில் கொண்டு அளக்கப்படுகிறது (BMI z score).

37 ஆய்வுகளின் முடிவுகளில் 4019 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, BMI z ஸ்கோர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 0.06 அலகுகள் தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது. 24 ஆய்வுகளின் முடிவுகளில் 2785 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, BMI ஸ்கோர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 0.53 kg/m2அலகுகள் தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது. 17 ஆய்வுகளின் முடிவுகள் 1774 குழந்தைகளின் முடிவுகளை ஒன்றிணைத்து, உடல் எடை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரியாக 1.45 kg தலையீடு குழவில் கட்டுப்பாடு குழுக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து காணப்படுகின்றது.

சிகிச்சையின் மற்ற விளைவுகளில், சுகாதாரம் சார்ந்த வாழ்வின் தரத்தின் முன்னேற்றத்தில் தெளிவில்லாமல் இருந்தது. எந்த ஆய்வும் மரணத்தின் காரணங்களையும், நோயுற்ற தன்மை அல்லது சமூக பொருளாதார காரணங்களையும் விவரிக்கவில்லை. மிக மோசமான விளைவுகள் மிகக் குறைவு. 31 ஆய்வில் இரண்டு ஆய்வுத் தகவல்கள் மட்டுமே மோசமான நிகழ்வுகளைக் பதிவு செய்துள்ளது.(4/2105 பங்கேர்ப்பாளர்களை கொண்ட குணநல மாற்றஙகள் தலையீட்டுக்கு குழ, 7/1991 பங்கேர்ப்பாளர்களை கொண்ட ஒப்பீட்டு குழுவுடன் ஒப்பிடப்பட்டது.) இந்த ஆதாரம் ஜூலை 2016 வரை தேதி வரை நேர்த்தியாக உள்ளது.

சான்றுகளின் தரம்

ஒட்டுமொத்த ஆதாரங்களின் தரம் குறைவு அல்லது மிகக்குறைவாக இருந்தன, அதற்கு முக்கிய காரணம் ஆய்வுகள் எப்படி நடத்தப்பட்டன என்பதில் வரையறுக்கப்பட்ட நம்பிக்கை, மற்றும் ஆய்வுகளின் முடிவுகள் ஆய்வுகளுக்கு இடையே சீரற்றதாக இருந்தன. மேலும் ஆய்வின் விளைவுகளை விவரிக்க மிக குறைவான ஆய்வகளும், அதில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிககையும் குறைவாகவே உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வெங்கடேஷ் P், ஜாபெஸ் பால்]

Citation
Mead E, Brown T, Rees K, Azevedo LB, Whittaker V, Jones D, Olajide J, Mainardi GM, Corpeleijn E, O'Malley C, Beardsmore E, Al-Khudairy L, Baur L, Metzendorf M-I, Demaio A, Ells LJ. Diet, physical activity and behavioural interventions for the treatment of overweight or obese children from the age of 6 to 11 years. Cochrane Database of Systematic Reviews 2017, Issue 6. Art. No.: CD012651. DOI: 10.1002/14651858.CD012651.

Our use of cookies

We use necessary cookies to make our site work. We'd also like to set optional analytics cookies to help us improve it. We won't set optional cookies unless you enable them. Using this tool will set a cookie on your device to remember your preferences. You can always change your cookie preferences at any time by clicking on the 'Cookies settings' link in the footer of every page.
For more detailed information about the cookies we use, see our Cookies page.

Accept all
முறைப்படுத்து