Skip to main content

பக்கவாதத்திற்கான தொலை-மறுவாழ்வு சேவைகள்

வயது வந்தவர்களில் ஏற்படும் இயலாமைக்கு பக்கவாதம் ஒரு பொதுவான காரணமாக உள்ளது. பக்கவாதத்திற்கு பிறகு ஒரு நபருக்கு, நடத்தல், குளித்தல், உடுத்துதல், மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்குபெறுதல் போன்ற அன்றாட காரியங்களை மேற்கொள்ள சிரமப்படுவது பொதுவானதாகும். அநேக மக்களுக்கு பக்கவாதத்திற்கு பிறகு மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படுகிறது; இது பொதுவாக, மருத்துவமனை அல்லது மருந்தக அமைப்பில் ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களால் வழங்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களை தொடர்புக் கொள்ள உதவும் தொலைபேசி அல்லது இணையம் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தன. தொலை-மறுவாழ்வு என்று அழைக்கப்படும் இந்த அணுகுமுறை, மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு மிக வசதியான மற்றும் அதிக செலவில்லாத ஒரு வழிமுறையாக இருக்கலாம்​.

இந்த திறனாய்வு,​ பக்கவாதத்திற்கு பிறகான ​தொலை-மறுவாழ்வின் ​பயன்பாட்டிற்கான ​ஆதாரங்களை ​சேகரிக்க நோக்கம் கொண்டது. நாங்கள்,​ பக்கவாதம் வந்த ​933 மக்கள் சம்பந்தப்பட்ட 10 ஆய்வுகளை ​அடையாளம் கண்டோம். ஆய்வுகள்,​ கை செயல்பாடு மற்றும் நடப்பதற்குரிய திறனை மேம்படுத்தும் வகையில் ​வடிவமைக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள், மற்றும் பக்கவாதம் வந்த ​மக்கள் மருத்துவமனையை விட்டு செல்லும் போது அவர்களுக்கு ​ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட வெவ்வேறு வகையான சிகிச்சைகளை ​பயன்படுத்தின. ஆய்வுகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால், ​ஒட்டுமொத்த பலன்களை ​தீர்மானிக்கும் பொருட்டு​முடிவுகளை இணைப்பது ஒவ்வாத காரியமாக இருந்தது. எ​னவே இந்நிலையில், தொலை –மறுவாழ்வு என்பது மறுவாழ்வு வழங்குவதற்கான ​ஒரு சிறந்த வழியா ​என்பதை காட்டப் போதுமான ஆராய்ச்சி ​செய்யப்படவில்லை. மேலும், தொலை-மறுவாழ்வு ​திட்டத்தை ​பயன்படுத்தி சிகிச்சை வழங்குவதின் ​விலைபயன்​-திறன் பற்றிய தகவல்கள் இல்லை. மேற்படியான ​சோதனைகள் அவசரமாக தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Laver KE, Adey-Wakeling Z, Crotty M, Lannin NA, George S, Sherrington C. Telerehabilitation services for stroke. Cochrane Database of Systematic Reviews 2020, Issue 1. Art. No.: CD010255. DOI: 10.1002/14651858.CD010255.pub3.