இரத்த அழுத்த நிலைகள் சாதரணமாக அல்லது உயர்ந்து இருந்தாலும், அதனை அதிகரிப்பதில் நமது தற்போதைய உப்பு உட்கொள்ளல், ஒரு முக்கிய காரணியாகும் என்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தத்தை அதிகமாக ஏற்படுத்தக் கூடும், இது பக்கவாதங்கள், மாரடைப்புகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரித்து, மற்றும் நீரிழிவு சிறுநீரக நோய் தீவிரமடைவதை வேகப்படுத்தும். ஒன்று மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு கொண்ட 254 நோயாளிகளைக் கொண்ட 13 ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டது. நாள்தோறும் 8.5 கிராம் அளவில் உப்பு உட்கொள்ளலை குறைப்பது, இரத்த அழுத்தத்தை 7/3 mm Hg-க்கு குறைத்தது. ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 கிராம் அளவு உணவுமுறை உப்பு உட்கொள்ளலை குறைக்க வேண்டி பொது ஆரோக்கிய நடைமுறை வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன, மற்றும் இந்த அளவிலாவது தங்களின் உணவிலிருந்து உப்பைக் குறைப்பது நீரிழிவு நோய் கொண்ட மக்களில் நன்மை பயக்கும்.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.