தூங்கும் போது, மேல் மூச்சுக்குழாய் (நுரையீரலுக்கான வழி) குறுகுவது அல்லது அடைத்துக் கொள்வதின் காரணத்தினால், மூச்சு விடுதல் நிற்பதலோ அல்லது குறைவதலோ தடங்கலான தூக்க மூச்சின்மை ஏற்படும். இது, சத்தமான குறட்டை மற்றும் எப்போதாவது மூச்சின்மையை (மூச்சு விடுதல் நிற்கும்) ஏற்படுத்தும். இது, பகல்நேர தூக்கத்திற்கு வழி வகுக்கும், மற்றும் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் சாலை விபத்துகள் ஆகிவற்றையும் ஏற்படுத்தக் கூடும். வாழ்க்கை முறை மாற்றம், குறிப்பாக, உடல் எடை குறைப்பு, தூக்க நலம், மற்றும் உடற்பயிற்சிஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. இது, மேல் மூச்சுக் குழாயின் மீதான அழுத்தத்தை குறைக்க உதவும் மற்றும் மூச்சுக் குழாயின் தசை விசையை அதிகரிக்கக் கூடும். எனினும், இந்த உத்திகளின் விளைவுகளை மதிப்பிட்ட எந்த சோதனைகளையும் இந்த திறனாய்வு காணவில்லை, மற்றும் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.