சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளில் பங்கேற்பாளர்களை சேர்க்கக் கூடிய உத்திகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பல சோதனைகள் போதுமான பங்கேற்பாளர்களை சேர்ப்பதில்லை மற்றும் இது, ஆராய்ச்சியின் முடிவுகளை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு மிகவும் கடினமாக்குகிறது. சோதனைகள் வடிவமைத்து மற்றும் இயக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆள் சேர்க்கையை மேம்படுத்துவதற்கான திறன் வாய்ந்த உத்திகள் பெரும் பயனாக இருக்க முடியும். சோதனைகளில், ஆள் சேர்க்கையை அதிகரிக்கக் கூடிய சில உத்திகளை இந்த திறனாய்வு கண்டு பிடித்தது. பதிலளிக்காதவர்களுக்கு, அந்த சோதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொலைபேசி மூலம் ஞாபகப்படுத்தலாம். சாத்தியமான சோதனை பங்கேற்பாளர்களை ஆராய்ச்சி குழுவினர் தொடர்பு கொள்ள , தேர்வுசெய்தலுக்கு பதிலாக விலகுதல் நடைமுறைகளை பயன்படுத்தலாம், அல்லது சில பங்கேற்பாளர்களை போலி சிகிச்சை அல்லது செயல்படா சிகிச்சை தலையீட்டை பெற செய்து மறைப்பதற்கு பதிலாக, தாங்கள் எந்த சிகிச்சையை சோதனையில் பெறுகிறோம் என்று அவர்கள் தெரிய செய்கிற ஒரு வெளிப்படையான ஆய்வு வடிவத்தை பயன்படுத்தலாம். எனினும், இந்த சில பயனுள்ள உத்திகளில் உள்ள குறைகள் அவற்றின் பரவலான பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கூடும். ஏனைய பல ஆள் சேர்க்கை உத்திகளின் விளைவு தெளிவின்றி இருக்கிறது. பல ஆய்வுகள் போலி சோதனைகள் மூலம் ஆள் சேர்க்கையை ஆராய்ந்தன, மற்றும் அவற்றின் கண்டுபிடிப்புகள் உண்மையான சோதனைகளில் எவ்வாறு நடைமுறைபடுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. உண்மையான சோதனைகளில், ஆள் சேர்க்கை உத்திகளின் மதிப்பீட்டை அதிக ஆய்வாளர்கள் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.