நாள்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள்

திறனாய்வு கேள்வி

நாள்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகளின் திறனை மதிப்பீடு செய்வது.

பின்னணி

மோட்டார் கட்டுப்பாடு உடற்பயிற்சி முதுகெலும்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் தாங்கும் தசைகளை ஒருங்கிணைந்த மற்றும் திறமையான முறையில் முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கபட்ட பிரபலமான உடற்பயிற்சியாகும். நோயாளிகள் ஆரம்பத்தில் எளிய பணிகளின் போது தசைகளின் சாதாரண பயன்பாட்டை சிகிச்சையளிபவர்களது வழிகாட்டுதல் மூலம் பயிற்சி செய்வார்கள். நோயாளிகளின் திறன் அதிகரித்தபின் முதுகு தண்டு மற்றும் மூட்டு தசைகள் உட்படுத்தும் மிகவும் சிக்கலான மற்றும் செயல்பாடு பணிகள் கொண்ட உடற்பயிச்சி கொடுக்கப்படுகிறது.

தேடல் தேதி

இந்த ஆதாரம் ஏப்ரல் 2015 நிலவரப்படியானது.

ஆய்வு பண்புகள்

மொத்தத்தில், 2431 பங்கேற்பாளர்கள் 29 சோதனைகளில் சேர்ந்திருந்தார்கள். ஆய்வு மாதிரி அளவுகள் 20 முதல் 323 பங்கேற்பாளர்களை கொண்டு இருந்தன. மற்றும் அவற்றில் பெரும்பாலானோர் முதல் நிலை மற்றும் முன்றாம் நிலை மருத்துவகண்காணிப்பில் இருந்து சேர்க்கப்பட்ட நடுத்தர வயது மக்களாக இருந்தனர். சிகிச்சை திட்டங்களின் கால அளவு 20 நாட்கள் முதல் 12 வாரங்கள் மற்றும் சிகிச்சை அமர்வுகளின் எண்ணிக்கை வாரத்திற்கு ஒன்று முதல் ஐந்து அமர்வுகளாக இருந்தன. பதினாறு ஆய்வுகள் MCE உடன் மற்ற உடற்பயிற்சிகளை ஒப்பிட்டன, ஏழு ஆய்வுகள் MCE உடன் குறைவான தலையீடுகளை ஒப்பிட்டன. ஐந்து ஆய்வுகள் MCE உடன் கைமுறை சிகிச்சைகளை ஒப்பிட்டன. மூன்று ஆய்வுகள் MCE உடன் பல உடற்பயிற்சிகளுடன் மின் சார்ந்த சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டன. மற்றும் ஒரு ஆய்வு MCE உடன் வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் சார்பிலான தொலை சார்ந்த புனர்வாழ்வுடன் ஒப்பிட்டன.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

MCE அநேகமாக மற்ற குறைந்தபட்ச தலையிடுகளை காட்டிலும் அனைத்து பின்தொடர் காலங்களிலும் வலி, செயல்பாடு மற்றும் உலகளாவிய மீட்பு உணர்வில் நல்ல மேம்பாடு வழங்குகிறது. MCE உடற்பயிற்சிகள் மற்றும் வலி, இயலாமை, ஒட்டுமொத்தமாக மீட்பு உணர்வுகள் போன்றவற்றில் மின் சார்ந்த சிகிச்சையை காட்டிலும் சிறிதளவு நல்ல முன்னேற்றம் அளிக்கிறது மற்றும் வாழ்க்கை தரத்தில் குறுகிய மற்றும் இடைபட்ட கால அளவில் நல்ல மேம்பாடுகள் அளிக்கிறது . MCE மற்றும் கைமுறை சிகிச்சை இடையே அனைத்து விளைவுகள் மற்றும் பின்தொடர் கால அளவிலும் சிறிய அல்லது எந்த வேறுபாடும் இல்லை. MCE மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகள் இடையே சிறிய அல்லது எந்த வேறுபாடும் காணப்படவில்லை. MCE மற்ற உடற்பயிற்சிகளை விட உயர்வானது என்று சிறிய ஆதாரங்கள் வழங்கப்பட்ட நிலையில், நாள்பட்ட கீழ்முதுகு வலிக்கு உடற்பயிற்சி திட்டத்தை தேர்ந்தெடுப்பது நோயாளி மற்றும் சிகிச்சையளிப்பவர் விருப்பத்தின் அடிப்படையில் மற்றும் சிகிச்சையாளர் பயிற்சி, செலவுகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்ததாக இருக்கவேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information