ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான குடும்ப சிகிச்சை

விமர்சன கேள்வி

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது இருவருமே இவர்களுக்கு இடையிலான தொடர்பு, உறவுகளை வலிமையாக்குதல், அவர்களை சமாளித்தல் போன்றவற்றை மேம்படுத்த குடும்ப நல சிகிச்சை எப்படி உதவ முடியும் என்பதற்கான ஆதாரங்கள் என்ன ?

பின்னணி

ASD யால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது, நட்புகள் மற்றும் உறவுகளை வளர்ப்பது,பராமரிப்பது ஆகியவற்றில் பெரும்பாலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வழக்கமான மாற்றங்களை நிர்வகிக்க கடினமாக உள்ளது. ASD உள்ளவர்கள் தங்களது வயது முதிர்ந்த காலங்களில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளை நம்பியுள்ளனர். ASD உடைய நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலநேரங்களில் மன அழுத்தம், கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர்.

பல ஆய்வுகள் ASD அல்லது குடும்ப அங்கத்தினர்களுடன் பேசும் சிகிச்சையின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்துள்ளன. இந்த சிகிச்சைகள் அவர்களுடனான தொடர்பு மற்றும் சமாளிப்பு,மனநல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த முடியும் என்று ஆய்வு கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. சிகிச்சையின் விளைவுகள் வழக்கமாக ASD மக்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களாலும் பெறப்படுகிறது. ஆனால் இருவரிடம் இருந்தும் அல்ல.

குடும்ப சிகிச்சை முறை குடும்பத்தினர் சிக்கலான சூழ்நிலைகளை உணருவதற்கும், ,கஷ்டங்களைப் பற்றி சிந்திக்கவும், நிர்வகிக்கவும் புதிய வழிகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ASD யால் பாதிக்கப்பட்டவர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்து உறவினர்களுக்கு ASD யின் முக்கிய அறிகுறிகளின் தாக்கம்,மற்றும் அதிக சிரமங்களை அனுபவிக்கும் மக்கள்,குடும்பத்தின் மீது தாக்கம் ஆகியவை குடும்ப சிகிச்சை முறையின் உதவியால் மிக முக்கியமாக கண்டறியப்பட்டது

ASD க்கான குடும்ப சிகிச்சையைப் பரிசீலித்த, 2017 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட அல்லது வெளியிடப்படாத அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் தேடினோம்.

ஆய்வு பண்புகள்

ASD க்கான குடும்ப சிகிச்சையின் தலையீடுகளின் நன்மைகள் பற்றி ஆராயும் சில ஆய்வுகள் இருந்தாலும் ,எந்த சிகிச்சையும் குடும்ப சிகிச்சையையும் அல்லது சிகிச்சை அற்ற முறையையும் ஒப்பிடவில்லை. சிகிச்சையை தொடங்குவதற்காக காத்திருக்கும் மக்கள் குழுவினர் அல்லது மற்றொரு மனநல சிகிச்சைக்காக. மேலும் ஒரு ஆய்வு வகைப்படுத்த காத்திருப்பு நிலையில் உள்ளது.

ஆதாரங்களின் தரம்

குடும்ப சிகிச்சை முறை ASD மக்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பயன்படுவதை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடப்படும் அளவு மட்டுமே உள்ளன. குடும்பத்தின் கவனம் சார்ந்த தலையீடுகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சமாளிப்பதற்கும்,தொடர்புகளை மேம்படுத்துவத்ற்கும் இன்னும் அதிகமான மதிப்பீட்டு திறனாய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா வெங்கடேஷ், ஜாபெஸ் பால்]

Tools
Information