நாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவை குறைப்பதினால் உடல் எடையின் மீது ஏற்படும் விளைவு

நமது உணவிலுள்ள கொழுப்பிலிருந்து கிடைக்கும் சக்திக்கும் நமது உடல் எடைக்கும் உள்ள நேரடி தொடர்பு பற்றி தெளிவாக தெரியவில்லை. உடல் எடையை குறைப்பதற்கு நோக்கமல்லாத வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளில், நமது உணவிலுள்ள கொழுப்பிலிருந்து பெறப்படும் சக்தியை குறைப்பதன் மூலம் உடல் எடை மற்றும் கொழுப்புத்தன்மையின் மீது ஏற்படும் விளைவை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. நமது உணவிலுள்ள கொழுப்பின் அளவை குறைப்பதன் மூலம், உடல் எடை, எடை உயரம் விகித குறியீடு, மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றில் சிறிய ஆனால் காணத்தக்க வகையில் குறைவுகள் காணப்பட்டன என இந்த திறனாய்வு கண்டது. வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் இருவகையினரிலும் இந்த விளைவு காணப்பட்டது. இந்த விளைவு காலளவில் மாறவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information