ஏட்ரியக் குறு நடுக்கம்(AF) கூடிய இதய நோய்க்கான உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை

பின்புலம்

ஏட்ரியக் குறு நடுக்கம் (AF) என்பது ,ஒருவர் அனுபவிக்கும் மிகவும் பொதுவாக காணப்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புஆகும் . இது இதயத்தின் செயல்பாட்டை "எடுத்துக் கொண்டு"அதனைப் பாதிப்பதுடன் , இதய துடிப்பை சீரற்றதாகவும் ,இதயத்தை திறன் அற்றதாகவும் ஆக்கும் மின் துடிப்பை அனுப்புகிறது. சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சு திணறல், கிறுகிறுப்பு, பலவீனம் மற்றும் மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். ஏட்ரியக் குறு நடுக்கம் உள்ளவர்கள் மற்றும் மற்றும் அதற்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை திரும்பப் பெறும் நோக்கோடு உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை செய்யபடுகிறது.

திறனாய்வு கேள்வி

இந்த முறையான திறனாய்வு உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை, ஏட்ரியக் குறு நடுக்கம் உள்ள வயது வந்தோருக்கு அளிக்கும் நன்மை தீமைகளை மதிப்பீடு செய்தது.

ஆய்வு பண்புகள்

நாங்கள் 421பங்கேற்பாளர்கள் கொண்ட 6 சமவாய்ப்பு ஆய்வுகளை எடுத்துகொண்டோம். இந்த ஆதாரம் ஜூன் 2016 வரையிலான நிலவரப்படியானது.

முக்கிய முடிவுகள்

இந்த 6 ஆய்வுகளிலும் இரண்டு இறப்பு மற்றும் 8 தீவிர பக்க விளைவு நிகழ்வுகள் இருந்தமையால், உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை நோயாளிகளுக்கு மிகவும் முக்கிமானதாக கருதப்படும் , மரணம் மற்றும் தீவிர பக்க விளைவு நிகழ்வுகள் (எ.கா-மருத்துவமனையில் சேர்த்தல்) போன்றவை மேம்பட்டதா என்று கூற போதுமான தரவுகள் இல்லை. உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை நோயாளிகளின் வாழ்க்கை தரத்தில் குறிப்பிடும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, எனினும் அவை உடற்பயிற்சி திறனை அதிகரிக்கலாம்.

ஆதாரங்களின் தரம்

ஆய்வு முடிவு ஆதாரங்கள் மிகக்குறைந்த தரத்திலிருந்து மிதமான தரம் அளவீட்டிலே கிடைக்கப்பெறுகின்றன. சோதனைகளில் பங்கு பெற்றவர்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது சாத்தியமாக இருந்தது. பல சோதனைகளின் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப் படவில்லை. சில தாக்கங்கள் பற்றி கூறப்பட்ட முடிவுகள் சோதனைக்குச் சோதனை மாறுபட்டு இருந்தன. இம்மாதியான காரணங்கள் இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகளை நாம் உறுதியாகக் கூறுவதை மட்டுப்படுத்துவதாக உள்ளன.

முடிவுகள்

உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சையின் விளைவுகளை மதிப்பீடு செய்ய , பரவலான எட்ரியக் குறு நடுக்கநோயால் தாக்கப்பட்ட நோயாளிகள் தொகை அதிகம் நிறைந்த சூழ்நிலையில், சார்பு ஆபத்து (risk of bias) மற்றும் தற்செயலாக நடக்ககூடிய சார்பு ஆபத்து (risk of bias of chance)கள் குறைவாக உள்ள சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் மேலும் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information