இதயத் தமனி நோயை தடுப்பதற்கு ஷி காங்

திறனாய்வு கேள்வி

இதயத் தமனி நிகழ்வுகளை மற்றும் ஆரோக்கியமான வயது வந்தவர்கள் மற்றும் இதயத் தமனி நோய்க்கு அதிகரித்த அபாயத்தைக் கொண்டிருக்கும் மக்களில் இதயத் தமனி அபாய காரணிகளை குறைப்பதற்கு ஷி காங் சிகிச்சை தலையீடுகளின் திறனை இந்த திறனாய்வு மதிப்பிடுகிறது.

பின்புலம்

இதயத் தமனி நோய் என்பது ஒரு உலகளவு ஆரோக்கிய சுமையாகும். எனினும், உடற்பயிற்சி மட்டங்களை அதிகரிப்பது, மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு தளர்வை மேம்படுத்துவது போன்ற அநேக மாற்றத்தக்க நடத்தைகளை மாற்றுவதன் மூலம் இதயத் தமனி அபாயம் குறைக்கப்படலாம் என்று எண்ணப்படுகிறது. ஷி காங், சீனாவில் தோன்றியது மற்றும் ஷி - வை (உடலினுடே பாய்ந்து செல்லும் வாழ்க்கை ஆற்றல் சக்தி) மறு நிலைப்படுத்த உடற்பயிற்சி, மனதை ஒழுங்குப்படுத்துதல், மற்றும் சுவாச கட்டுப்பாடு போன்றவற்றை உள்ளடக்கும். ஷி காங், மன அழுத்தத்தை குறைத்து மற்றும் உடற்பயிற்சி மட்டங்களை அதிகரிக்கக் கூடும்.

ஆய்வு பண்புகள்

ஆதாரம் நவம்பர் 2014 வரைக்கும் நிலவரப்படியானது. குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு நீடித்த சிகிச்சை தலையீடுகளைக் கொண்ட சோதனைகளை நாங்கள் உள்ளடக்கினோம்.

முடிவுகள் மற்றும் முடிவுரை

11 நிறைவுப்பெற்ற சோதனைகளை (1369 பங்கேற்பாளர்கள்) நாங்கள் கண்டோம். இந்த சோதனைகள், சேர்க்கப்பட்ட பங்கேற்பாளர்கள், ஷி காங் கால அளவு, மற்றும் சிகிச்சை தலையீடுகளின் பின்-தொடரல் போன்றவற்றில் வேறுபாட்டினை காட்டின. சோதனை நிறைவு பெற்ற பின்னரும், அநேக வருடங்களுக்கு பின் தொடரப்பட்ட இரண்டு சோதனைகளுக்கு, அனைத்து -காரண இறப்பு, பக்கவாத இறப்பு, மற்றும் பக்கவாத நிகழ்வு ஆகியவற்றின் மீது ஷி காங் ஒரு நன்மையான விளைவைக் கொண்டிருந்தது என்று முடிவுகள் காட்டின, ஆனால், சோதனைகள் முடிந்த பின்னான வருடங்களில் ஷி காங் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்ததா என்பது பற்றி உறுதியற்று உள்ளதால் , இந்த விளைவு ஷி காங்-னால் ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெளிவாக இல்லை. இரத்த அழுத்தம், மற்றும் இரத்த கொழுப்பு மட்டங்கள் மேல் ஷி காங்-ன் சில நன்மையான விளைவுகள் கவனிக்கப்பட்டன, ஆனால் இந்த முடிவுகள், குறிப்பிடத் தகுந்த ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டிருந்த சிறிய ஆய்வு மக்கள் எண்ணிக்கையுடைய சிறிதளவு எண்ணிக்கை ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருந்தன. ஆதலால், இதயத் தமனி நோயை தடுப்பதற்கு ஷி காங் நன்மையளிக்குமா என்பதை தீர்மானிக்க முடிவதற்கு முன்னால், கூடுதலான , பெரிய, உயர்-தரமான, நீண்ட-கால சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information