பக்கவாதம் கொண்ட பராமரிப்பு இல்ல வாசிகளுக்கான தொழில்முறை சிகிச்சை

உலகளவில், இயலாமைக்கு பக்கவாதம் ஒரு முதன்மை காரணமாகும், மற்றும் இது பராமரிப்பு இல்ல மக்களில் பரவலாகக் காணப்படும். தங்கள் சொந்த இல்லங்களில் குடியிருக்கும் பக்கவாதம் கொண்டவர்களைக் காட்டிலும் பக்கவாதம் கொண்ட பராமரிப்பு இல்ல வாசிகள் ஆற்றல் குறைவுள்ளவர்களாகவும் மற்றும் சார்ந்திருப்பவர்களாகவும் இருப்பதற்கு சாத்தியமுள்ளதாக இருக்கும் போது, தொழில் முறை சிகிச்சை போன்ற தொடரும் பக்கவாதம் சிறப்பு புனர்வாழ்வை பெறுவதில் அவர்களுக்கு சாத்தியம் குறைவாக உள்ளது. தொழில் முறை சிகிச்சையானது அன்றாட நடவடிக்கைகளில் தற்சார்பின் அதிகபட்ச மட்டத்தை அடைவதற்கு மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சமூகத்தில் வாழும் பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கு தொழில்முறை சிகிச்சையின் நன்மைகளுக்கு ஆதரவளிக்க ஆதாரம் காணப்படக் கூடும். எனினும், சமூகத்தில் வாழும் மக்களிலிருந்து பக்கவாதம் கொண்ட பராமரிப்பு இல்ல மக்கள் வேறுபடுவர். உதாரணத்திற்கு, பிற நோயுற்ற நிலைகளோடு, உயர் மட்டத்திலான இயக்கமின்மை, சிறுநீர் அடங்காமை மற்றும் குழப்பம் ஆகியவற்றை கொண்டிருக்க அவர்களுக்கு அதிக சாத்தியமுள்ளது. பக்கவாதம் கொண்ட பராமரிப்பு இல்ல வாசிகளுக்கான தொழில்முறை சிகிச்சையின் நன்மைகளை முடிவாக விவரிக்க தற்போது பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது என்று 118 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு சோதனையின் இந்த திறனாய்வு கண்டது. பக்கவாதம் கொண்ட பராமரிப்பு இல்ல வாசிகளுக்கான தொழில்முறை சிகிச்சை தலையீடுகளை சோதிக்கும் கூடுதலான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய ஒரு சோதனை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information