அபாயங்களைக் குறைப்பதற்கும் மற்றும் தெரு குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் சிகிச்சை தலையீடுகள்

உலகம் முழுவதும், லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் தெருக்களில் வாழ்ந்துக் கொண்டு மற்றும் வேலை செய்து கொண்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அநேகர், குறிப்பிடத் தகுந்த எதிர்ப்பு திறன் மற்றும் உறுதியான சமாளிக்கும் திறன்களை காட்டுவர், ஆனாலும் தொடர்ந்து, அபாயங்களால் தாக்கப்படக் கூடிய நிலைமையில் உள்ளனர். வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதற்கு, அபாயங்களை குறைப்பதற்கு மற்றும் பொதுப்படையான சமூகத்திலிருந்து ஓரங் கட்டப்படுவதை தடுப்பதற்கு சேவைகள் தேவைப்படுகின்றன. உயர்-வருமான நாடுகளில், தெரு-தொடர்புடைய குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஆதரவளிக்கும் சேவைகள் போன்ற 19 சிகிச்சை தலையீடுகளை மொத்தம் பதிமூன்று ஆய்வுகள் செறிவுடன் மதிப்பிட்டுள்ளன. பெரும்பாலான ஆய்வுகள், சிகிச்சை தலையீடு-சார்ந்த சேவைகளுக்கு எதிராக வழக்கமான புகலிடம் மற்றும் சுருக்கமான தங்கல் சேவைகள், அல்லது சிகிச்சை சார்ந்த/ஆரோக்கிய சிகிச்சை தலையீடுகளுக்கு எதிராக ஒப்பிட்டன. இந்த ஆய்வுகளிடையே, கலவையான முடிவுகளை நாங்கள் கண்டோம், ஆனால், சிகிச்சை பெற்ற பங்கேற்பாளர்களும் மற்றும் வழக்கமான சேவைகளைப் பெற்றவர்களும் ஒரே மாதிரியான அளவில் நன்மை பெற்றனர் என்று ஒட்டுமொத்த கண்டுப்பிடிப்புகள் பரிந்துரைக்கின்றன. வழக்கமான சுருக்க தங்கல் மற்றும் புகலிடம் சேவைகளின் நன்மைகளை, மிக குறிப்பாக குறைவான மற்றும் நடுத்தர-வருமான நாடுகளில், மேற்படியான ஆராய்ச்சி கருத்தில் கொள்ள வேண்டும், மற்றும் அவை தெரு-தொடர்புடைய குழந்தைகள் மற்றும் இளம் மக்களை நோக்கமாக கொள்ள வேண்டும். குறைந்த-வருமான நாடுகளில், வாழ்வதற்கு சம்பாதிக்கவும், அல்லது போர், குடியேற்றம் அல்லது நகர்புறமாகுதல் போன்றவற்றால் தெருவில் இருக்கக் கூடிய குழந்தைகளோடு ஒப்பிடப்படும் வகையில் எந்த ஒரு ஆய்வுகளும் பங்கேற்பாளர்களை உள்ளடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, இந்த திறனாய்வில் உள்ளடக்கப்பட்ட ஆதாரத்தின் தரத்தை குறைந்தது/மிதமானது என்று மதிப்பிட்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information