தவறான தளத்தில் அறுவை சிகிச்சை செய்வதை குறைக்கும் குறுக்கீடுகள்

தவறான தளத்தில் அறுவை சிகிச்சை ஒரு அரிய, ஆனால் நோயாளிகள் மற்றும் நல்வாழ்வுப் நிபுணர்களுக்குக் கணிசமான விளைவுகளைக் கொண்டுள்ள மோசமான நிகழ்வு ஆகும். ஒரு அறுவை சிகிச்சை அல்லது ஊடுறுவும் (invasive) செயல்முறை, தவறான உடல் பகுதியில், தவறான நோயாளிக்கு , அல்லது தவறான செயல்முறையில் செய்யப்படுகிற போது இது ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை பிழை குறைக்க அல்லது WSS தடுக்க பல தலையீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் முன்மொழியப்பட்டுள்ளன. அவை உலகளாவிய மரபுகளை உருவாக்குவது, தளம் குறியிடல் மற்றும் 'காத்திரு ' நடைமுறைகள். போன்ற முக்கியமான அறுவை சிகிச்சைக்கு முன்பாக சரிபார்ப்பை உள்ளடக்கியவையாகும். இந்த மேம்படுத்தப்பட்ட ஆய்வு இரண்டு தடங்கல்- நேர- தொடர் (interrupted-time-series) ஆய்வுகளைக் கொண்டது. அதில் ஒன்று மூலத் திறனாய்வில் இருந்தது. அது தவறான தளத்தில் அறுவை சிகிச்சை நிகழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இலக்கு கல்வி தலையீட்டினை மதிப்பீடு செய்தது .இதனால் தவறான தளத்தில் அறுவை சிகிச்சை, மற்றும் அதன் நிகழ்வு குறைக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (ஆய்வுகளுக்கான தரவு கள் ஒரு தலையீட்டிற்கு முன் மற்றும் பின் பல நேரம் புள்ளிகளாக சேகரிக்கப்பட்டவை) கூடுதலாக ஒரு ஆய்வு உலகளாவிய மரபு வரை முறை அறிமுகத்திற்கு முன்னும் பின்னும் தவறான தளத்தில் அறுவை சிகிச்சை நிகழ்வுகளை மதிப்பீடு செய்தது. இருப்பினும் தலையீடுகளின் தாக்கம் மீதான முடிவுகளின் தொடர்பு தெளிவற்றதாயிருந்தது. ஏனெனில் உலகளாவிய மரபு வரைமுறை அறிமுகத்திற்கு முன் இந்த நிகழ்வுகள் பிற தெளிவற்ற காரணிகளால் குறைந்து கொண்டிருந்தன ஒட்டுமொத்தமாக பார்த்தோமென்றால் இந்த திறனாய்வு குறிப்பிட்ட மக்களின் மீது செயயப்பட்ட மிக குறைந்த தரமுடைய சான்று கொண்ட, இரண்டு ஆராய்ச்சிகளை கொண்டதாய் இருந்தது .மேலும் பெருந்திரளான பார்வையாளர்கள் மத்தியில் இதனைப் பொதுமைப்படுத்தும் சாத்தியம் குறைவாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information