கடுமையான பக்கவாத நோயாளிகளுக்குத் தொற்றினைத் தடுக்க நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உயர் வருமானம் உள்ள நாடுகளில் பக்கவாதம் இயலாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மற்றும் உலகம் முழுவதும் மரணத்திற்கு இரண்டாவது காரணமாக உள்ளது. தொற்று போன்ற சில காரணங்களால் அடிக்கடி இவை மேலும் சிக்கல் படுகிறது. பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் தொற்று விளைவுபயனை பாதகமாக பாதிக்கும். கடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு தொற்று தடுக்க அளிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை தொற்று வரும் எண்ணிகையை குறைப்பதினால் நல்ல விளைவுகள் ஏற்படுகிறது. 5 ஆய்வுகள் கொண்ட இந்த திறனாய்வு 506 பக்கவாத நோயாளிகளுக்கு தொற்று தடுக்க அளிக்கப்பட நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை, தொற்று வரும் எண்ணிக்கையை குறைக்கிறது என்று குறிப்பிடுகிறது. நோயாளிகளது சார்புநிலை மற்றும் இறப்பு மீது உள்ள விளைவுகள் பற்றி இந்த ஆய்வில் தெரியப்படுத்தவில்லை. ஆனால் அவற்றை நீக்க முடியாது; ஏனென்றால் இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் சிறியதாக மற்றும் பலவகைப்பட்டதாக இருந்தன. நுண்ணுயிர்க் கொல்லி தடுப்பு சிகிச்சை, நோயாளி இறப்பு மற்றும் சார்புநிலை பற்றிய திறனை ஆய்வு செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்