இது, வயதான மக்கள் பொருத்தமான மருந்துகளை எடுத்துக் கொள்வதை ஆரோக்கிய வல்லுநர்கள் மேம்படுத்துவதற்கான வழிகள் மீதான திறனாய்வு ஆகும்.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

நாள்பட்ட வியாதிகளுக்கும் மற்றும் வியாதி மேலும் மோசமடைவதை தடுக்கவும் வயதான மக்கள் மருந்துகளை உட்கொள்வர். எனினும், அதிகமான மருந்துகளை எடுத்துக் கொள்வது தீங்கு விளைவிக்கும். வயதான மக்கள் தங்களின் வியாதிக்கு மிகவும் திறன் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான மருந்துகளை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்த ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராய்ந்த ஆய்வுகளை இந்த திறனாய்வு உள்ளடக்கியது. மருந்துகள் தொடர்பான பிரச்னைகளை அடையாளம் காண, தடுக்க மற்றும் சரி செய்ய, மற்றும் அத்துடன் மருந்துகளை சரியான வகையில் பயன்படுத்துவதை மேம்படுத்த மற்றும் ஆரோக்கியக் கல்வி மற்றும் ஊக்கம் என மருந்தாளுநர்கள் மூலம் அளிக்கப்படும் மருந்தக பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கும். மருத்துவரின் கணினி உதவியோடு நோயாளிகளுக்கு பொருத்தமான மருந்துகளை தேர்ந்தெடுக்கும் 'கணினி-சார்ந்த முடிவெடுத்தல் ஆதரவு' என்பது இன்னொரு யுக்தியாகும்.

வயதான மக்கள் பொருத்தமான மருந்துகளை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு மருந்தக பராமரிப்பு போன்ற தலையீடுகள் வெற்றிகரமாக இருக்கலாம் என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரத்தை இந்த திறனாய்வு வழங்குகிறது. எனினும், இது மருத்துவ ரீதியிலான முன்னேற்றத்திற்கு வழி வகுக்குகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்