சொத்தை பற்களை அடைக்க பயன்படும் பிசின் தன்மை உடைய மற்றும் பிசின் தன்மைஅற்ற பற்களோடு ஓட்டும் வெள்ளி உலோக கலவைகள்.

விமர்சனத்திற்கான கேள்வி

பற்களை அடைக்க பயன்படுத்தும் வெள்ளி உலோக கலவைகளில், பிசின் தன்மை சேர்த்து அவைகளை பற்களோடு ஓட்டும் திறனுடையதாக மாற்றுவதினால், அவை அடைக்கப்பட்ட பற்களில் நீண்ட காலம் நீடித்து உழைக்கின்றதா?

அடிப்படை (அல்லது) பின்னணி

பல் சொத்தை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம், பற்களை பாதித்து பல் சொத்தை உருவாக்குகிறது.

சொத்தை பற்களை அடைப்பதற்கு பல முறைகளும் பல பொருட்களும் உள்ளன. இருப்பதிலேயே மிக அதிகமாகவும் மிக குறைந்த செலவிலும் பல் அடைப்பதற்கு பயன்படுத்தப்படுவது வெள்ளி என்று அழைக்கப்படும் உலோக கலவையே ஆகும். உலோகக் கலவையுடன் ஓட்டும் பிசின் சேர்ப்பதனால், அத்தகைய கலவை பிசின் இல்லாத கலவையை விட நீண்ட நாட்கள் நீடித்து வருகின்றதா என்று தொகுப்பாளர்கள் கண்டறிய வேண்டினர்.

ஆராய்ச்சியின் இயல்புகள்

கொக்ரேன் வாய் நலம் அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தொகுப்பு ஜனவரி 21, 2016 வரை புதுப்பிக்கப்பட்டது. 113 பற்கள் அடைக்கப்பட்ட 31 பங்கேற்பாளர்கள் (21 ஆண்கள், 10பெண்கள்) கொண்ட ஆராய்ச்சியின் முடிவு இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஐரோப்பாவில் உள்ள பல் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் பொதுவான பல் சிகிச்சைக்கு தகுதி உள்ளவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரே நபரில், வாயின் ஒரு பக்கம் ஓட்டும் தன்மை கொண்ட பல் அடைக்கும் முறையும் எதிர் பக்கம் ஓட்டும் தன்மை அற்ற பல் அடைக்கும் முறையும் பின்பற்றி அவை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இரண்டு வருடம் முடிந்த பின்பு எவ்வித மாற்றமும் தெரியவில்லை.

முக்கிய முடிவுகள்

ஒரு ஆராய்ச்சி மட்டுமே ஓட்டும் தன்மை கொண்ட மற்றும் ஓட்டும் தன்மை அற்ற வெள்ளி கொண்டு பல் அடைக்கும் முறைகளை இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆராய்ந்து, இரண்டு முறைகளுக்கும் இடையே பல் கூச்சத்திலும், நீடித்து நிலைக்கும் திறனிலும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளது. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே கூடுதல் பலன் இருப்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவர்கள் இவற்றிற்கு ஆகும் கூடுதல் செலவை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல் மருத்துவர்களால் பல் வேறு வகையான ஓட்டும் பிசின்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தபடுகிறது. இருப்பினும் அவைகளின் பயன்களை பற்றி போதுமான ஆராய்ச்சிகள் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது.

ஆதாரத்தின் தரம்

ஒரே ஒரு ஆராய்ச்சி மட்டுமே ஓட்டும் தன்மை கொண்ட மற்றும் ஓட்டும் தன்மை அற்ற வெள்ளி கொண்டு பல் அடைக்கும் முறைகளை இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆராய்ந்து, இரண்டு முறைகளுக்கும் இடையே பல் கூச்சத்திலும், நீடித்து நிலைக்கும் திறனிலும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளது.

ஆதாரத்தின் தரம் குறைவானதே மேலும் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்பதால், அதில் பங்குபெற்றவர்களை பொது மக்களின் பிரதிநிதியாக ஏற்றுகொள்ள இயலாது. எனவே இதன் முடிவுகள் பொதுவாக இயங்கும் பல் மருத்துவமனை சிகிச்சையுடன் ஒப்பிட இயலாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி சிவசக்தி மணிவாசகன், இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சைன்சஸ், புதுச்சேரி ]

Tools
Information