ஒரு அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட வயது வந்தவர்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகள்

பின்புலம்

ஒரு அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட வயது வந்தவர்கள் அவர்களுக்கு தேவையான ஆரோக்கிய பராமரிப்பை பெறுவதில் அநேகந் தரம் சிரமம் கொள்வர். அறிவுச் சார்ந்த இயலாமை இல்லாத பிற வயது வந்தவர்களளோடு ஒப்பிடுகையில், அவர்கள் குறைவான உடல் நலத்தைக் கொண்டிருப்பர், மற்றும் ஆரோக்கிய பராமரிப்பை கண்டுப்பிடிப்பதில், பெறுவதில் மற்றும் பணம் கட்டுவதில் அதிகமான சிரமத்தைக் கொள்வர். இவை, உடல் மற்றும் மன ஆரோக்கிய பராமரிப்பு தேவைகள் இரண்டிற்கும் ஏற்படும்.

திறனாய்வு கேள்வி

சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு வெவ்வேறு வழிகளின் விளைவுகளை மதிப்பிட நாங்கள் மருத்துவ இலக்கியத்தின் ஒரு திறனாய்வை நடத்தினோம். இது, முந்தி வெளியான திறனாய்வின் முதலாவது புதுப்பித்தல் ஆகும்.

ஆய்வு பண்புகள்

4 செப்டம்பர் 2015 வரைக்குமான அனைத்து தொடர்புடைய ஆய்வுகளுக்கு நாங்கள் தேடினோம். முந்தி அடையாளம் காணப்பட்ட ஆறு ஆய்வுகளோடு, மற்றும் இந்த புதுப்பித்தலுக்கு கிடைக்கப்பெற்ற ஒன்றோடு, ஏழு ஆய்வுகளை நாங்கள் கண்டோம். அனைத்து ஆய்வுகளும் அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட நபர்களில் மனநலத்தின் மேலான சிகிச்சை தலையீட்டின் தாக்கத்தை மதிப்பிட்டன; உடல் நலத்தை எதுவும் கருத்தில் கொள்ளவில்லை.அந்த ஆய்வுகள், அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட நபர்களுக்கு அதிகமான ஆரோக்கிய சேவைகளை வழங்குவது, உளவியல் ஆதரவு, மற்றும் மருத்துவமனைக்கு பதிலாக வீட்டில் சிகிச்சையளிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு விதமான சிகிச்சை தலையீடுகளைப் பயன்படுத்தின. அறிவுச் சார்ந்த இயலாமை கொண்டவர்களின் நடத்தை தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை தலையீடுகள் எவ்வாறு உதவின; பராமரிப்பு வழங்குபவர்களுக்கு எந்தளவு சுமையை ஏற்படுத்தின மற்றும் அவை எவ்வளவு செலவு பிடித்தது என்பவற்றை ஆய்வுகள் முக்கியமாக பார்த்தன. பாதகமான நிகழ்வுகளை எந்த ஆய்வும் மதிப்பிடவில்லை.

முக்கிய முடிவுகள்

சமூகம்-சார்ந்த நடத்தை சிகிச்சை, நடத்தை பிரச்னைகளை குறைக்கக் கூடும். நடத்தை பிரச்னைகளை குறைப்பதில் பிற சிகிச்சை தலையீடுகள் ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நாங்கள் உறுதியற்று உள்ளோம். பராமரிப்பு வழங்குபவர்களுக்கு அவர்களின் அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட உறவினர்களை பராமரிப்பதில் இந்த சிகிச்சை தலையீடுகள் எவ்வாறு உதவியாய் இருந்தன அல்லது ஏற்கனவே வழங்கப்படும் வழக்கமான பராமரிப்போடு ஒப்பிடுகையில் அவை எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரமே உள்ளது.

ஆசிரியர்களின் முடிவுரைகள்

அறிவுச் சார்ந்த இயலாமைகள் கொண்ட மக்களுக்கு சேவைகளை ஒழுங்கு செய்வதின் வெவ்வேறு விதமான வழிகளின் மேல் சிறிதளவே தகவல் உள்ளது. பெரும்பாலான ஆய்வுகள் அறிவுச் சார்ந்த இயலாமைகள் மற்றும் மனநல பிரச்னைகள் கொண்ட மக்கள் மீது நோக்கம் கொண்டிருந்தன. அறிவுச் சார்ந்த இயலாமைகள் மற்றும் உடல்நல பிரச்னைகள் கொண்ட மக்கள் மீது எந்த ஆய்வுகளும் இருக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information