நாள்பட்ட தசைகூடு வலிக்கு மேற்பூச்சு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்.

அடிப்படை கருத்து

முதுமை மூட்டழற்சிக்கு மேற்பூச்சு கீடொபுராஃபன் மற்றும் மேற்பூச்சு டைக்லோஃபெனாக் நன்கு வலி நிவாரணம் ஏற்படுத்த வல்லது. அனால் மேர்பூச்சு மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது 10% பேர் மட்டுமே குடுதலாக இந்த பயனை அடையமுடியும். மற்ற நாள்பட்ட வலி உண்டுபண்ணும் நோய்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

பின்னணி

முதுமை மூட்டழற்சி (OA) போன்ற நோய்களில் நாள்பட்ட தசைக்கூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக வலியின் தீவிரம் மிதமான முதல் கடுமையானது வரை இருக்கும், மேலும் இவை முன்று மாதங்களுக்கு அல்லது அதற்கு மேல் நீடிக்கும்.

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் காயமில்லாத தோல் மீது களிம்பு, கிரீம், தெளிப்பு அல்லது பிளாஸ்திரி வடிவில் பயன்படுத்தப்படுவது. புற மேற்பூச்சு NSAIDகள் தோல் வழியாக ஊடுருவி, திசு அல்லது முட்டு உள் செல்லும், அதன்முலமாக அது திசுக்களில் வலிக்கான காரணிகளில் செயல்ப்பாட்டை குறைக்கும். இரத்தத்தில் உள்ள மருந்துகள் அளவு வாய் வழியாக எடுக்கப்படும் NSAIDகளுடன் ஒப்பிடும் போது மேற்பூச்சு NSAIDகளில் மிக்க குறைவு. இது தீய விளைவுகளின் ஆபத்துக்கூற்றை குறைக்கும்.

ஆய்வு பண்புகள்

2012ல் வெளியிடப்பட்ட "பெரியவர்களின் நாள்பட்ட தசைக்கூட்டு வலிக்கு மேற்பூச்சு (topical) NSAIDs" என்ற திறனாய்வின் புதுப்பிக்கப்பட்ட ஆய்வு இது. ஒருநாளைக்கு ஒருமுறையாவது மேற்பூச்சு NSAID உபோகித்த பொதுவாக உயர் தரம் கொண்ட 10,631 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற 39 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆய்வுகள் பல்வேறு வகையான மேற்பூச்சு மருந்துகளை மருந்துபோலியுடன் ஒப்பிட்டு பரிசோதித்தன. சிகிச்சையளித்த 6 முதல் 12 வாரங்களுக்கு பிறகு, நல்ல வலி குறைந்த (சுமார் பாதி) பங்கேற்பாளர்கள் மேல் நாங்கள் ஆர்வம் கொண்டோம். நீண்ட காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் உண்மையான உலகின் அதிகமான பிரதிநிதிகளாகும், ஏனென்றால் இந்த நீண்டகால நிலைமைகளில் சிகிச்சை அளிக்கப்படாதிருந்தால் வலி பெரும்பாலும் சிகிச்சை இல்லாமல் குறையாது. தனி NSAIDs எவ்வளவு திறனானது என்று அறிந்து கொள்ள நங்கள் முற்பட்டோம்.

முக்கிய முடிவுகள்

கீடொபுராஃபன் மற்றும் டைக்லோஃபெனாக் ஆகிய இரண்டும் நல்ல தரம்வாய்ந்த மற்றும் நீண்டகால ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டன, அவை பெரும்பாலும் 40 வயது மேற்பட்ட முழங்கால் மூட்டழற்சியால் வலி உடைய மக்களை கொண்டது. ஒப்பிடப்பட்ட மருந்துகள், திரவம் அல்லது களிம்பு வடிவிலான மேற்பூச்சு கீடொபுராஃபன் அல்லது டைக்லோஃபெனாக் மற்றும் மேற்பூச்சு மருந்துபோலிகள். டிக்லோபெனக் மற்றும் கீடொபுராஃபன் மருந்திற்கு, மூட்டழற்சி உடைய 10 இல் 6 மக்களுக்கு 6 முதல் 12 வாரங்களுக்கு பிறகு வலி பெரும்பாலும் குறைந்தது. இதை மருந்துபோலியுடன் ஒப்பிடும் போது மருந்துபோலி 10இல் 5 மக்களுக்கு வலி குறைந்தது.(மிதமான தர சான்றுகள்)

தோல் எதிர்வினைகள்(பெரும்பாலும் குறைந்தவை) மேற்பூச்சு மருந்துபோலியுடன் (100இல் 5) ஒப்பிடும் போது மேற்பூச்சு டிக்லோபெனகில் (100இல் 20) பரவலாக இருந்தன; மேற்பூச்சு கீடொபுராஃபன் மற்றும் மேற்பூச்சு மருந்துபோலி இடையே ஒப்பிடும் போது எந்த வித்தியாசமும் இல்லை. (மிதமான தர சான்றுகள்). வயிற்றுப் புண்கள் போன்ற மற்ற பாதகமான நிகழ்வுகள் இந்த ஆய்வில் மோசமாகப் பதிவாகியுள்ளன, ஆனால் மேற்பூச்சு டிக்லோபெனக் அல்லது கீடொபுராஃபன் மற்றும் மேற்பூச்சு மருந்துப்போலி ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இல்லை. (மிகவும் குறைந்த தர சான்றுகள்) தீவிரமான எதிர் விளைவு நிகழ்வுகள் அரிதானவை.

ஆதாரங்களின் தரம்

மேற்பூச்சு டிக்லோபெனக் மற்றும் மேற்பூச்சு கீடொபுராஃபன் ஆதாரத்தை மதிப்பிட்டோம், இது மருந்துப்போலிக்கு மிதமாகவும், தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு மிகவும் குறைவாகவும் இருந்தது. எனினும், சான்றின் தரம் மிதமாக மட்டுமே இருந்தது, மேலும் ஆராய்ச்சி இந்த கண்டுபிடிப்புகளை மாற்றக் கூடும் என்று பொருள் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information