நோய் விடுப்பில் உள்ள ஊழியர்களில் பணி இயலாமையை தடுப்பதற்கு பணியிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல்

பின்புலம்

குறைந்த மணி நேரங்களுக்கு வேலை செய்தல், அல்லது குறைவாக தூக்குதல் போன்ற பணியிட மாற்றங்கள் நோய் விடுப்பில் உள்ள ஊழியர்கள் சீக்கிரம் பணிக்கு திரும்ப உதவக் கூடும். நோய் விடுப்பில் உள்ள ஊழியர்கள் சீக்கிரம் பணிக்கு திரும்ப உதவுவது நீண்ட -கால இயலாமையை தடுக்கும். பணியிட மாற்றங்களின் திறன் பற்றி இன்னமும் உறுதியற்று இருப்பதால், வழக்கமான பராமரிப்பு அல்லது மருத்துவ சிகிச்சை தலையீடுகளை விட பணியிட சிகிச்சை தலையீடுகள் பணிக்கு திரும்புதலின் நேரத்தை குறைத்தனவா என்பதை நாங்கள் சோதித்தோம்.

ஆய்வுகள்

2 பெப்ரவரி 2015 வரையான இலக்கியத்தை நாங்கள் தேடினோம். ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலான பின்-தொடர்தல் காலம் மற்றும் 1897 ஊழியர்களை உள்ளடக்கிய 14 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் இணைத்தோம். எட்டு ஆய்வுகளில், ஊழியர்கள் தசையெலும்பு பிரச்னைகளை கொண்டிருந்தனர், ஐந்து ஆய்வுகளில், மனநல பிரச்னைகளை கொண்டிருந்தனர், மற்றும் ஒரு ஆய்வில் புற்றுநோயை கொண்டிருந்தனர்.

முக்கிய முடிவுகள்

பணி இயலாமையின் அனைத்து காரணங்களையும் கருத்தில் கொள்ளும் போது, ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு உதவுவதிலும் மற்றும் நோய் விடுப்பு வராமையின் கால அளவை குறைப்பதிலும் பணியிட சிகிச்சை தலையீடுகள் திறன் மிக்கவையாக இருந்தன என்று முடிவுகள் காட்டுகின்றன. வேலைக்கு திரும்புவதில் நீடித்திருப்பதிலும் மற்றும் நோய் விடுப்பு மீண்டும் ஏற்படுவதிலும் பணியிட சிகிச்சை தலையீடுகளின் திறன் கேள்விக்குரியதாக உள்ளது. பணி இயலாமை காரணத்தின் அடிப்படையில், பணியிட சிகிச்சை தலையீடுகளின் திறன் வேறுபடுகின்றன. தசையெலும்பு பிரச்சனைகள் கொண்ட ஊழியர்களில், வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடும் போது, நோய் விடுப்பு வராமையை குறைப்பதில் பணியிட சிகிச்சை தலையீடுகளுக்கு ஆதரவாக மிதமான-தரமுடைய ஆதாரத்தை நாங்கள் கண்டோம். தசையெலும்பு பிரச்சனைகள் கொண்ட ஊழியர்களில், வலி, மற்றும் செயல்பாட்டு நிலைமையை மேம்படுத்துவதிலும் பணியிட சிகிச்சை தலையீடுகள் திறன் மிகவையாக இருந்தன. மனநல பிரச்சனைகள் அல்லது புற்றுநோயை கொண்டிருந்த ஊழியர்களில்.நோய் விடுப்பு வராமையை குறைப்பதில் பணியிட சிகிச்சை தலையீடுகளின் திறன் பற்றி தெளிவாக தெரியவில்லை. மேலும், பணியிட சிகிச்சை தலையீடுகள் தனியாக அளிக்கப்படவேண்டுமா அல்லது ஒரு புலனுணர்வு-நடத்தை சிகிச்சை தலையீட்டுடன் இணைப்பாக அளிக்கப்படவேண்டுமா என்பது தெளிவாக இல்லை.

சான்றின் தரம்

பணியிட சிகிச்சை தலையீடுகள், ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு உதவுவதிலும் மற்றும் நோய் விடுப்பு வராமையின் கால அளவை குறைப்பதிலும் உதவுகின்றன என்பதற்கு மிதமான-தரமுடைய ஆதாரத்தை நாங்கள் கண்டோம். எனினும், ஊழியர்கள் தசையெலும்பு பிரச்சனைகள், மன நல பிரச்சனைகள் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை பொருத்து முடிவுகள் வேறுபட்டு இருந்ததால், வேலைக்கு திரும்புவதில் நீடித்திருப்பதில், பணியிட சிகிச்சை தலையீடுகளின் திறனிற்கு மிக குறைந்த தர ஆதாரத்தை நாங்கள் கண்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information