தண்டுவட காயம் கொண்ட மக்களில், நடக்கும் திறனை முன்னேற்றுவதற்கான இடப்பெயர்வு பயிற்றுவிப்பு அளித்தல்

தண்டு வட காயமென்பது, எந்த ஒரு அளவிலும் உணர்ச்சி மற்றும் இயக்க குறைவு, தன்னியக்கம் அல்லது குடல் பிறழ்ச்சி ஆகவற்றை ஏற்படுத்தக் கூடிய, தண்டு வடத்திலுள்ள நரம்பு மூலகங்களின் நசிவாகும். நடப்பதற்கான இடப்பெயர்வு பயிற்றுவிப்பு தண்டுவட காயத்திற்கு பிறகான புனர்வாழ்விற்கு பயன்படுத்தப்படுகிறது, மற்றும் ஒரு நபரின் நடக்கக் கூடிய திறனை முன்னேற்றுவதற்கு உதவக் கூடும். எனினும், உடல் எடை ஆதரவுடன் அல்லது அல்லாத நடைபொறி பயிற்றுவிப்பு, ரோபோடிக்-ஆதரவு நடைப் பயிற்சி மற்றும் மின்தூண்டுதல் போன்ற பல உக்திகள் இந்த செயல்பாட்டை அதிகரிப்பதற்கு உள்ளன.

தண்டுவட காயம் கொண்ட 309 மக்கள் சம்பந்தப்பட்ட ஐந்து சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் காணப் பெற்றன. பங்கு பெற்ற மக்களில், எந்தவொரு இடப்பெயர்வு சிகிச்சை முறையும் நன்மையான அல்லது தீமையான விளைவை கொண்டிருக்கவில்லை. அனைத்து ஐந்து ஆய்வுகளிலும், ஆய்வு குழுக்களிடையே தீய நிகழ்வுகள் அல்லது விலகியோர்களில் எந்த வித்தியாசங்களும் இல்லை. தண்டுவட காயம் கொண்ட மக்களில், எந்த இடப்பெயர்வு பயிற்றுவிப்பு யுக்தி மிக சிறப்பாக நடக்கும் திறனை முன்னேற்ற கூடும், அல்லது அந்த இடப்பெயர்வு பயிற்றுவிப்பு, பிற புனர்வாழ்வு வகைகளை காட்டிலும் ஒரு நபரின் நடக்கும் திறனிற்கு நன்மை செய்யும் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information