சிறுபான்மை குழுக்களில் ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான பண்பாடு-சம்மந்தப்பட்ட திட்டங்கள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

சிறுபான்மை குழுக்களில் ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில், பண்பாடு-சம்மந்தப்பட்ட ஆஸ்துமா விளக்கக் கல்வி திட்டங்கள் ஆஸ்துமா தொடர்புடைய விளைவுகளை மேம்படுத்துமா என்பதை இந்த திறனாய்வில் நாங்கள் சோதித்தோம். 5 முதல் 59 வருடங்கள் வரை வயதுடைய 617 நோயாளிகளைக் கொண்ட நான்கு ஆய்வுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டிருந்தன. பண்பாடு-சம்மந்தப்பட்ட திட்டங்கள், வயது வந்தவர்களில் வாழ்க்கைத் தரத்தை மற்றும் குழந்தைகளில் ஆஸ்துமா பற்றிய அறிவை மேம்படுத்தியது என்று நாங்கள் கண்டோம், ஆனால் இவை ஆஸ்துமா அதிகரித்தல்களை குறிப்பிடத் தக்க வகையில் மேம்படுத்தவில்லை. எனினும், ஆஸ்துமா அதிகரித்தல்களின் மீதான தாக்கத்தை அல்லது பண்பாடு-சம்மந்தப்பட்ட திட்டங்கள் எல்லா அமைப்புகளிலும் பயனுள்ளவையாக இருக்குமா என்பதின் மேல் நம்பிக்கை ஏற்படுவதற்கு போதுமான தரவு இல்லை. இருந்தபோதிலும், சிறுபான்மை குழுக்களில் உள்ள அதிகமான ஆஸ்துமா தீவிரத்தையும் மற்றும் ஆரோக்கிய விளைவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் கடுஞ் சிக்கலையும் கருத்தில் கொள்ளும் போது, ஆஸ்துமா விளக்கக் கல்வி திட்டங்கள் முடிந்த மட்டும் பண்பாடு-சம்மந்தப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்படலாம். இந்த கேள்வியை முன்மொழிய மற்றும் தொடர்புடைய மருத்துவ நடைமுறை மற்றும் ஆரோக்கிய கொள்கைக்கு மேற்படியாக தகவலளிக்க அதிக ஆய்வுகள் தெளிவாக தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.