அழுத்தப் புண்களைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அபாயக் கணிப்பு கருவிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

அழுத்த புண்கள் (படுக்கை புண்கள், அழுத்தம் சீழ் புண்கள் மற்றும் அழுத்தம் காயங்கள் என்றும் அழைக்கப்படும்) என்பது அழுத்தம் அல்லது அழுத்தத்தோடு இணைந்தமென்பகுதி பெயர்ச்சி (எலும்புகள் நிறைந்த கட்டமைப்புகள் மற்றும் தோல் இடையே ஏற்படும் திசு விலகல் மற்றும் நீட்சி) காரணமாக தோல், அடியிலுள்ள திசு அல்லது இரண்டிலும், வழக்கமாக எலும்பு மேற்புடைப்பு உள்ள இடத்தில, ஏற்படும் குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிய, வேறிடம் பரவாத காயப்பரப்பு ஆகும். முக்கியமாக, அழுத்த சீழ்ப் புண்கள், கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம், நரம்பு சேதம் அல்லது இரண்டும் கொண்ட மக்களில் ஏற்படும். அழுத்த சீழ் புண்கள் ஆபத்து மதிப்பீடு, அழுத்த சீழ்ப் புண்கள் ஏற்படும் ஆபத்தில் உள்ள நபர்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பணியின் ஒரு பகுதியாக உள்ளது. ஆபத்து மதிப்பீடுகள் பொதுவாக சரிபார்ப்பு பட்டியல்களை பயன்படுத்துகின்றன .இவற்றின் பயன்பாடு அழுத்த சீழ் புண்கள் தடுப்பு வழிமுறைகள் மூலம் பரிந்துரைக்கபடுகிறது. இந்த மறுஆய்வு, ஆய்விற்கு சேர்க்க தகுதி உடைய இரண்டு ஆய்வுகளைக் கண்டறிந்தது. முதல் ஆய்வில் ஒரு கட்டமைப்பற்ற ஆபத்து மதிப்பீடு மற்றும் பிரேடன் ஆபத்து மதிப்பீடுஆகியவற்றை ஒப்பிடுகையில் புதிய அழுத்த சீழ் புண்கள் உருவான எண்ணிகையில் எந்த வேறுபாடும் இல்லை. எனினும் இந்த ஆய்வில் முறையான வரம்புகள் இருந்தன. வாட்டர்லோ ஆபத்து மதிப்பீடு கருவி, ராம் ஸ்டேடியஸ் ஆபத்து மதிப்பீடு கருவி அல்லது மருத்துவ தீர்ப்பு மட்டும் பயன்படுத்தி மதிப்பீடு செய்த இரண்டாவது ஆய்விலும் புதிய அழுத்த சீழ் புண்கள் உருவான எண்ணிக்கையில் எந்த வேறுபாடும் இல்லை என்று கண்டறியப்பட்டது இந்த ஆய்வு முறைகளில் வரம்புகள் இல்லை. எனவே, இன்றைய தேதி வரை, ஆபத்து மதிப்பீடு கருவிகள் பயன்படுத்துவதால் புதிய அழுத்த புண்கள் உருவாதல் எண்ணிக்கை குறைகிறது என்று பரிந்துரைக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ரவி. ர மற்றும் சி.இ.பி.என்.அர் குழு