கடுமையான பக்கவாதத்திற்கு நப்டிட்ரோபிர்ல் (Naftidrofuryl)

மேலைநாடுகளில் பக்கவாதம் மரணத்திற்கு மூன்றாவது முக்கிய பொது காரணமாகவும் இயலாமைக்கான மிக அதிக பொது காரணமாகவும் உள்ளது. நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார வளவசதிகள் மீது பக்கவாதம் பெரும் சுமையை சேர்க்கிறது. பக்கவாதத்தால் ஏற்படும் மூளை சேதத்தை குறைக்கும் மருந்துகள் உருவாக்கும் முயற்சிகள் தொடர்கிறது ஆனால் எந்த பயனுள்ள சிகிச்சையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. முந்தைய ஆண்டுகளில், naftidrofuryl கடுமையான பக்கவாதத்திற்கு சாத்தியமான சிகிச்சையாக கருதப்பட்டது. ஆனால் பிரிட்டனில் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. 1274 பங்கேற்பாளர்கள் கொண்ட ஆறு ஆய்வுகள் அடங்கிய , இந்த திட்டமிட்ட திறனாய்வு கடுமையான பக்கவாதம் சிகிச்சையில் பிழைப்பதற்கான மற்றும் இயலாமை தொடர்பான naftidrofurylலின் திறன் பற்றி முடிவுகளை பெற போதுமான தரவுகள் இல்லை என கண்டறிந்தது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information