முழங்கால் கீல்வாதத்திற்கான உள்-மூட்டு கார்டிகோஸ்டீராய்டு ஊசி

திறனாய்வு கேள்வி

முழங்கால் கீல்வாதம் உள்ள மக்களில் உள்-மூட்டு கார்டிகோஸ்டீராய்டுகளை (மூட்டிற்கு உள்ளே செலுத்தப்படும்), ஒரு போலி ஊசி அல்லது சிகிச்சையின்மையோடு ஒப்பிடுகையில், வலி, செயல்பாடு, வாழ்க்கைத் தரம், மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான விளைவுகள் பற்றிய ஆய்வுகளுக்கு 3 பிப்ரவரி 2015 வரையிலான இலக்கியத்தை நாங்கள் தேடினோம்.

பின்புலம்

கீல்மூட்டு வாதம் என்பது முழங்கால் போன்ற மூட்டுகளின் குருத்தெலும்பு பழுதடைவதோடு தொடர்புடையதாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, வழக்கத்திற்கு மாறாக எலும்பு வளர்வதன் மூலம் உடல் பதிலளிக்கிறது, இதனால், எலும்பானது உருவிழந்து, வலி, மற்றும் ஸ்திரமற்ற மூட்டிற்கு வழி வகுக்கும். இது, உடல் செயல்பாடு மற்றும் மூட்டின் பயன்பாட்டு திறனை பாதிக்கும்.

பொதுவாக, கீல்வாதம் என்பது வீக்கத்தின் மூலத்தைக் கொண்டது என்பதை விட சிதைவு என்று கருதப்படுகிறது என்றாலும், சில நேரங்களில், ஒரு வீக்க கூறு இருக்கக் கூடும். உள்-மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள், முழங்கால் மூட்டு உள்ளே செலுத்தப்படும் ஆற்றல் மிக்க அழற்சி -நீக்கி செயலிகளாகும்.

ஆய்வு பண்புகள்

3 பிப்ரவரி 2015 வரை தொடர்புடைய அனைத்து ஆய்வுகளை தேடிய பிறகு, இரண்டு வாரங்கள் முதல் ஒரு ஆண்டு வரையிலான காலஅளவு மற்றும் மொத்தம் 1767 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்த 27 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளைக் நாங்கள் கண்டறிந்தோம்.

முக்கிய முடிவுகள்

வலி

• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0 (வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 3 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
• போலி மருந்து பெற்றவர்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0 (வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.

இதனை வேறு விதமாக கூறலாம்:
• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பெற்ற 100 பேரில் 44 பேர்சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (44 %).
• போலிமருந்து பெற்ற 100 மக்களில் 31 பேர் சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (31 %).
• போலி மருந்தை விட, 13 அதிகபேர் உள்- மூட்டு கார்டிகோஸ்டெராய்டுகளுக்கு சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (13% வேறுபாடு).

ஆதாரத்தின் குறைந்த தரத்தினால், இந்த எண்கள் உண்மையான நன்மைகளை கணிசமான அளவில் அதிகமாக மதிப்பீடு செய்திருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உடல் செயல்பாடு

• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பெற்ற மக்கள் 1 மாதம் கழித்து அவர்களின் உடல் செயல்பாட்டை 0(இயலாமை இல்லை )-10(உச்சக்கட்ட இயலாமை) என்ற ஒரு அளவுக்கோலில் , 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
• போலி மருந்தை பெற்ற மக்கள் 1 மாதம் கழித்து, அவர்களின் உடல் செயல்பாட்டை 0 (இயலாமை இல்லை) -10(உச்சக்கட்ட இயலாமை) என்ற ஒரு அளவுக்கோலில், 1 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.

இதனை வேறு விதமாக கூறலாம் :

• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பெற்ற 100 மக்களில் 36 பேர் சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (36%).
• போலி மருந்து பெற்ற 100 மக்களில் 26 பேர் சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (26 %).
• போலி மருந்தை விட, 10 அதிக மக்கள் உள்- மூட்டு கார்டிகோஸ்டெராய்டு சிகிச்சையினால் மாற்றத்தை உணர்ந்தனர் (10% வேறுபாடு).

ஆதாரத்தின் குறைந்த தரத்தினால், இந்த எண்கள் உண்மையான நன்மைகளை கணிசமான அளவில் அதிகமாக மதிப்பீடு செய்திருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பக்க விளைவுகள்

• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பெற்ற 100 மக்களில் 13 பேர் பக்க விளைவுகளை அனுபவித்தனர் (13 %).
• போலி மருந்து பெற்ற 100 மக்களில் 15 பேர் பக்க விளைவுகளை அனுபவித்தனர் (15%).
• உள்- மூட்டு கார்டிகோஸ்டெராய்டுகளை விட, போலி மருந்தை பெற்ற 2 அதிகமான பேர் பக்க விளைவுகளை அனுபவித்தனர் (2% வேறுபாடு).

பக்க விளைவுகள் காரணமாக விலகியவர்கள்

• உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பயன்படுத்திய 1000 மக்களில் 6 பேர் பக்க விளைவுகளால் ஆய்வை விட்டு விலகினர் (0.6%).
• போலி மருந்து பயன்படுத்திய 1000 மக்களில் 17 பேர் பக்க விளைவுகளால் ஆய்வை விட்டு விலகினர் (1.7%).
• உள்- மூட்டு கார்டிகோஸ்டெராய்டுகளை விட, போலி மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் 11 அதிகமான பேர் விலகினர்.(1.1% வேறுபாடு).

மருத்துவமனையில் அனுமதி, நிலையான இயலாமை அல்லது மரணம் ஆகியவற்றுக்கு வழி வகுத்த பக்க விளைவுகள் 

உள்- மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பயன்படுத்திய 1000 மக்களில் 3 பேர் பக்க விளைவுகளால மருத்துவமனையில் இருத்தல் , நிலையான இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர் (0.3%). போலி மருந்து பயன்படுத்திய 1000 மக்களில் 4 பேர் பக்க விளைவுகளால் மருத்துவமனையில் இருத்தல் , நிலையான இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர்.(0.4%).உள்- மூட்டு கோர்டிகோஸ்டெராய்டுகளை விட, போலி மருந்து பெற்றவர்களில், 1 நபர் அதிகமாக பக்க விளைவுகளால் மருத்துவமனையில் இருத்தல் , நிலையான இயலாமை அல்லது மரணத்தை அனுபவித்தனர்.(0.1%வேறுபாடு).

ஆதாரத்தின் அடிப்படையில், உள்-மூட்டு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள், வலியில் ஒரு மிதமான முன்னேற்றத்தையும் மற்றும் உடல் செயல்பாட்டில் ஒரு சிறிய முன்னேற்றத்தயும் ஏற்படுத்தலாம், ஆனால் ஆதாரங்களின் தரம் குறைந்ததாகவும் மற்றும் முடிவுகள் முடிவற்றதுமாய் இருக்கிறது. உள்-மூட்டு கார்டிகோஸ்டீராய்டுகள் ஒரு போலி மருந்தை போன்றே பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது. எனினும், பக்க விளைவுகள் பற்றி துல்லியமான மற்றும் நம்பத் தகுந்த தகவல் நமக்கு இல்லை.

சான்றின் தரம்

எங்களின் எல்லா கண்டுபிடிப்புகளை குறைந்த தர ஆதாரமாகவே நாங்கள் மதிப்பிட்டோம் அதாவது இந்த முடிவுகளில் எங்களுக்கு சிறிதளவே நம்பிக்கை உள்ளது. ஏனெனில் பொதுவாக, முடிவுகள் ஆய்வுகளில் மிகவும் உடன்பாடற்று மற்றும் முக்கியமாக தரம் குறைந்த சிறிய ஆய்வுகளின் அடிப்படையில் இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information