ஒரு பல்பிறவிச்சூல் கொண்ட பெண்களுக்கு தாய் மற்றும் பச்சிளங் குழந்தையின் விளைவுகளை மேம்படுத்த தனிச்சிறப்பு கர்ப்பக்கால மருத்துவகங்கள் 

ஒரு பல்பிறவிச்சூல் கொண்ட பெண்களுக்கு, 'வழக்கமான' கர்ப்பக்கால பராமரிப்பிற்கு எதிராக 'தனிச்சிறப்பு' கர்ப்பக்கால மருத்துவகங்கள்

ஒரு குழந்தைக்கும் மேலாக வயிற்றில் சுமக்கும் பெண்கள், தாய் மற்றும் குழந்தைகள் இருவரையும் பாதிக்கக் கூடிய கர்ப்பக்கால சிக்கல்களுக்கு அதிகமான அபாயத்தைக் கொண்டிருப்பர். 'தனிச்சிறப்பு' கர்ப்பக்கால மருத்துவகங்கள் ஒரு பல்பிறவிச்சூல் கொண்ட பெண்களுக்கு, பெண்கள் மற்றும் அவர்களின் பச்சிளங் குழந்தைகளின் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு பல்பிறவிச்சூல் கொண்ட 162 பெண்களை உள்ளடக்கிய ஒரு சீரற்ற சோதனையை இந்த திறனாய்வு கண்டது. பெரும்பாலான முக்கியமான விளைவுகளுக்கு, துல்லியமற்ற மதிப்பீடுகள், தரவை வழங்கும் ஒற்றை ஆய்வின் சிறிதான ஆய்வு மாதிரி அளவு , மற்றும் சில விளைவுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான நிகழ்வுகள் போன்றவற்றால் ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை அல்லது மிக குறைந்த தரத்தைக் கொண்டிருந்தது என்று மதிப்பிடப்பட்டது. முதல் மாத வாழ்க்கையில் குழந்தை இறக்கும் வாய்ப்பிற்கு, தனிச்சிறப்பு கர்ப்பக்கால மருத்துவகங்கள் மற்றும் வழக்கமான பராமரிப்பிற்கு இடையே எந்த குறிப்பிடத் தகுந்த வித்தியாசங்களும் அடையாளம் காணப்படவில்லை. தனிச்சிறப்பு கர்ப்பக்கால பராமரிப்பை பெற்ற பெண்கள் குறிப்பிடத் தகுந்த வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளை பெறும் அதிக சாத்தியத்தைக் கொண்டிருந்தனர். பெண்கள் மற்றும் அவர்களின் பச்சிளங் குழந்தைகளுக்கான விளைவுகளை அறிக்கையிடும் சிறப்பாக- வடிவமைக்கப்பட்ட சோதனைகளிலிருந்து மேற்படியான தகவல் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information