சீஸோபிரேனியாவில் உடல் எடை அதிகரிப்பை குறைப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்

சீஸோபிரேனியா கொண்ட மக்களில், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற் பருமன் மிக பொதுவான பிரச்சனையாகும், மற்றும் மருந்தியல் மற்றும் மருந்தற்ற (உணவுமுறை/உடற்பயிற்சி) சிகிச்சை தலையீடுகள் இரண்டும் இந்த பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளன தேர்ந்தெடுக்கபட்ட மருந்தியல் மற்றும் மருந்தற்ற சிகிச்சை தலையீடுகள் மூலம் சிறியளவில் உடல் எடை குறைவு சாத்தியமாகும் என்று எங்களால் இந்த திறனாய்வில் காட்ட முடிந்தது, ஆனால், ஆய்வுகள் சிறியவையாகவும் மற்றும் வெவ்வேறு கால அளவுகளில் பல்வேறு சிகிச்சை தலையீடுகளை ஒப்பிட்டதாலும், இந்த முடிவுகளின் மீது உறுதியாய் இருக்க கடினமாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information