காயம் ஏற்படுவதை தடுப்பதற்கு வீட்டு பாதுகாப்பு விளக்கக் கல்வி மற்றும் பாதுகாப்பு உபகரணம் வழங்குதல்

தொழில் சார்ந்த நாடுகளில், குழந்தைப்பருவ இறப்பிற்கு காயங்கள் முதன்மை காரணமாகும். அதிக வசதியோடு வாழ்பவர்களைக் காட்டிலும், வசதியற்ற சூழல்களில் வாழும் மக்கள் காயத்திற்கான அதிகப்படியான அபாயத்தைக் கொண்டுள்ளனர். வீட்டு பாதுகாப்பு விளக்கக் கல்வி மற்றும் பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், காயங்களைக் குறைக்குமா மற்றும் பாதுகாப்பு நடத்தைகள் மற்றும் பாதுகாப்பான உபகரண பயன்பாட்டினை அதிகரிக்குமா என்பதை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. வசதியற்ற குடும்பங்களில், வீட்டு பாதுகாப்பு விளக்கக் கல்வி அதிக அல்லது குறைந்த திறனுடன் இருந்ததா என்பதையும் இது கண்டது. பல வெவ்வேறான பாதுகாப்பு நடத்தைகளை அறிக்கையிட்ட, 2,605, 044 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 98 ஆய்வுகளை இந்த திறனாய்வு ஆசிரியர்கள் கண்டனர், ஆனால், காயங்கள் மேலான தகவல்களை, ஒப்புமையான வெகு சில ஆய்வுகளே சேர்த்திருந்தன.

வீட்டில் வழங்கப்பட்ட வீட்டு பாதுகாப்பு தலையீடுகள், காயங்களின் விகிதங்களைக் குறைத்தன, ஆனால், இந்த கண்டுப்பிடிப்பை உறுதிபடுத்த அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று ஆசிரியர்கள் கண்டனர். முடிவுகள், ஆய்வுகள் இடையே வேறுப்பட்டிருந்தன, ஆனால், ஒட்டுமொத்தமாக, வீட்டு பாதுகாப்பு தலையீடுகளை பெற்ற குடும்பங்கள், பாதுகாப்பான வெப்பநிலை கொண்ட குழாய் சுடு தண்ணீர், வேலை செய்யக் கூடிய ஒரு புகை எச்சரிக்கை மணி, ஒரு தீ விபத்து தப்பிக்கும் திட்டம், பொருத்தப்பட்ட மாடிப்படி வாயில்கள், பயன்படுத்தாத மின் குழிவுகளுக்கு குழிவு உரைகள், ஐப்கக் சிரப் (கூழ்ம மருந்து), அணுகக் கூடிய நஞ்சு கட்டுபாட்டு மையத்தின் தொலைபேசி எண்கள், மற்றும் மருந்துகளை சேமிக்க மற்றும் சுத்தப்படுத்தும் தயாரிப்புகளை குழந்தைகள் அடையாதபடி எடுத்து வைத்தல் போன்றவற்றை பெறுவதற்கு அதிக சாத்தியத்தை கொண்டிருந்தன. அதிகமான காய அபாயத்தை கொண்ட குழந்தைகள் இருந்த குடும்பங்களில், வீட்டு பாதுகாப்பு விளக்கக் கல்வி சரிசமமாக திறனுள்ளவையாக இருந்தன என்று ஆசிரியர்கள் கண்டனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information