உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுக்க அல்லது குறைக்க தசை நீட்சி சிகிச்சை

விளையாட்டு போன்ற உடலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல மக்கள் அதற்கு முன் அல்லது பின் தசைகளை நீட்டிப்பர். காயம் ஏற்படும் அபாயத்தை குறைக்க, உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை குறைக்க அல்லது தடகள செயல்திறனை மேம்படுத்த போன்றவை வழக்கமான நோக்கமாகும். தசை நோவின் மேல் தசை நீட்டித்தலின் விளைவுகளை மட்டும் இந்த திறனாய்வு கண்டது

உடலியக்க நடவடிக்கைக்கு பின்பு அல்லது முன்பு, தசை நோவின் மீது தசை நீட்டித்தலின் விளைவை கண்ட 12 தொடர்புடைய சீரற்ற சோதனைகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. தசை நீட்சி பயிற்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 முதல் 30 மக்கள் வரை இருந்த பதினோரு ஆய்வுகள் சிறியவையாக இருந்தன. இதற்கு முரண்பாடாக, 2337 பங்கேற்பாளர்களை கொண்ட ஒரு ஆய்வு பெரிதாக இருந்தது, அதில் 1220 பேர் தசை நீட்சி குழுவில் இருந்தனர். பத்து ஆய்வுகள், தரப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகளை பயன்படுத்தி ஆய்வகங்களில் நடத்தப்பட்டன. ஒரே பெரிய ஆய்வை உள்ளடக்கிய இரண்டு ஆய்வுகள் மட்டும் களம்-சார்ந்த ஆய்வுகள் என அழைக்கப்பட்டன. சுயமாக-தேர்வு செய்த உடலியக்க நடவடிக்கையோடு சம்மந்தப்பட்ட தசை நோவின் மீது தசை நீட்டித்தலின் விளைவை அவை ஆராய்ந்தன. ஆய்வுகள் குறைந்தது முதல் மிதமான தரமுடையதாய் இருந்தன. சில ஆய்வுகள், உடலியக்க நடவடிக்கைக்கு முன்னான தசை நீட்டித்தலின் விளைவுகளை ஆராய்ந்தன, சிலவை உடலியக்க நடவடிக்கைக்கு பின்னான தசை நீட்டித்தலின் விளைவுகளை ஆராய்ந்தன, மற்றும் சிலவை உடலியக்க நடவடிக்கைக்கு முன்பும் மற்றும் பின்பும் தசை நீட்டித்தலின் விளைவுகளை ஆராய்ந்தன.

ஆய்வுகள் மிகவும் நிலையான முடிவுகளை அளித்தன. உடலியக்க நடவடிக்கைக்கு பின், ஒரு வாரம் அனுபவிக்கப்பட்ட தசை நோவின் மீது தசை நீட்சியினுடைய சிறிய விளைவு இருந்தது அல்லது எந்த விளைவும் இல்லை என அவை காட்டின.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information