அச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்கள்: தொழில்முறை பயிற்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பயன்களின் மீதான விளைவுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

ஒப்பீட்டளவில், குறைந்த செலவுகளில் ஒரு பரந்த பகிர்மானத்தை அனுமதிப்பதால், அறிவியல் தகவலை ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களுக்கு பகிர மருத்துவ பத்திரிகைகள் மற்றும் மருத்துவ நடைமுறை பரிந்துரைகள் பொதுவான வழிவகைகளாக இருக்கின்றன. அச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்களை வழங்குதல், ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களின் விழிப்புணர்வு, அறிவு, மனப்பாங்குகள், மற்றும் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்த, மற்றும் முடிவாக, தொழில்முறை பயிற்சி மற்றும் நோயாளிகளின் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்த கருதப்படுகின்றன. சிகிச்சையின்மையோடு ஒப்பிடும் போது, அச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்கள் ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர் பயிற்சியை சிறிதளவு மேம்படுத்துகிறது என்று இந்த திறனாய்வின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன, ஆனால் நோயாளி விளைவுகளின் மீதான அவற்றின் தாக்கத்தின் மீதான ஒரு தீர்மானத்தை முடிவுகள் இல்லாதது தடுக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.