நிமோனியாவால் பாதிக்கப்பட்டு காற்றோட்டம் (வெண்டிலேட்டர்) உள்ள நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக்(எதிர் உயிரி) சிகிச்சை

பின்னணி வெண்டிலேட்டர்ஸ் என்பது இயந்திரங்கள். அவை நோயாளிகள் சுவாசிக்க உதவுகிறது. காற்றோட்டக்குழாய் வாய் வழியாக சுவாசக் குழாயினுள் செல்கிறது. சிலநேரங்களில் பாக்டீரியாக்கள் வெண்டிலேட்டர் குழாய் வழியாக நோயாளியின் நூரையீரலுக்குள் சென்று நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நோய் வெண்டிலேட்டர் -தொடர்புடைய நிமோனியா என்றழைக்கப்படுகிறது. வெண்டிலேட்டர்-தொடர்புடைய நிமோனியா மிக தீங்கான விளைவை ஏற்படுத்த காரணமாகிறது மற்றும் சிலநேரங்களில் இறப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. வெண்டிலேட்டர் -தொடர்புடைய நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நிச்சயம் எந்த ஆன்டிபயாடிக்(எதிர் உயிரி) சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தீர்மானம் செய்ய வேண்டும், வழக்கமாக எந்த குறிப்பிட்ட பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியாமலேயே முடிவெடுக்க நேரிடும். இந்த முடிவு மிக முக்கியமானது. ஏனென்றால் பொருத்தமற்ற சிகிச்சை மிக தீங்கான ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும்.

தேடுதல் தேதி
நங்கள் டிசம்பர் 2015 வரை ஆய்வுகளைத் தேடினோம்.

ஆய்வுப் பண்புகள்
18 வயதிற்கு அதிகமான தீவிர பாதுகாப்பு சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர்-தொடர்புடைய நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மற்றும் ஆன்டிபயாடிக் (எதிருயிரி ) தேவைப்படும் நோயாளிகள் பற்றிய ஆய்வுகளை நாம் தேடினோம். மொத்தத்தில் 1080 பங்கேற்பாளர்களை கொண்ட 12 ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம்.

முக்கிய முடிவுகள்
ஒரு எதிர் உயிரி சிகிச்சை(ஆன்டிபையாட்டிக்) திட்டத்தின் பயன்கள் VS மற்றொரு ஆனால் வேறுபட்ட பல்வேறு ஆய்வுகள் கொண்ட அனைத்து ஆய்வுகளையும் ஒன்றிணைத்தோம். சில தவறுகள் ஏற்பட சாத்தியக் கூறுகள் இருந்தன. ஏனெனில் சில ஆய்வுகள், பங்கேற்றவர்களின் விளைவுகள் பற்றிய அறிக்கைகளை கொடுக்கவில்லை. மற்றும் மருந்து நிறுவனங்கள் நன்கொடை அளித்து செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வின் ஆசிரியர்கள் அந்த மருந்து நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்.

எங்கள் முடிவுகளை மதிப்பிடுவதற்கு புள்ளிவிவர நுட்பங்களைப் பயன்படுத்தினோம். ஒன்று வெர்சஸ் (VS ) பல எதிர் உயிரிகள் ( ஆண்டிபையாட்டிகள்) இறப்பில் அல்லது குணமடைவதில் அல்லது மோசமானவிளைவுகளில் எந்த மாற்றங்களும் நாங்கள் கண்டறியவில்லை. நம்முடைய கூட்டு சிகிச்சையின் ஒப்பபீடுக்காக துணைசேர்ப்பது விருப்பத்தின் அடிப்படையில் ஒரு ஆன்டிபயாடிக் சிகிச்சை மூலமாக குணமடைதல் மட்டுமே நம்மால் ஆராய முடிந்தது. அதிக அளவில் சிகிச்சை மூலம் குணப்படுத்துதலை Tigecycline மற்றும் impinem-cilastatin மட்டுமே செய்கிறது என்று கண்டறிந்தோம். நாங்கள் கார்பேபெனெம் (பன்மடங்கு-தடுப்பு பாக்டீரியாவால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) மற்றும் கார்பேபெனெம் அல்லாத சிகிச்சையைப் பார்த்தோம். இறப்பில் அல்லது குணமடைவதில் அல்லது மோசமானவிளைவுகளில் எந்த மாற்றங்களும் இல்லை .ஆனால் caarbapenems எதிர் உயிரி மருத்துவமனை குணமடைதலில் அதிக தொடர்புடையது என்று கண்டறிந்தோம்.

சான்றுகளின் தரம் பல விளைவுகள் மிதமாக இருப்பதாக ஆதாரங்களின் தரத்தை நாங்கள் மதிப்பீடு செய்தோம், மற்றும் மிக குறைந்த அளவு ஒற்றை ஆன்டிபயாடிக் மூலம் குணமடைதல் மற்ற பல ஆன்டிபயாடிக் மூலம் ஒப்பீடு செய்யும்போது மருத்துவமனை குணமடைதல் மிக குறைவாக இருந்தது.மேலும் non-carbapenem உடன் ஒப்பீடும்போது carbapenem பின் விளைவுகள் பற்றிய ஆதாரங்களின் தரம் மிக குறைவாக உள்ளதாக கண்டறிந்தோம்.

முடிவுகள்
ஒன்று மற்றும் கூட்டு சிகிச்சை இடையே வேறுபாடுகள் இல்லை என கண்டறிந்தோம்.ஒரு ஆன்டிபயாடிக் சிகிச்சை திட்டம் வெண்டிலேட்டர்- தொடர்புடைய நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் இது அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாமல் இருக்கலாம். ஏனெனில் ஆபத்துடைய தீங்கான பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

விண்டிலேட்டர்-தொடர்புடைய நிமோனியாவைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த ஒற்றை-ஆண்டிபயாடிக் தேர்வுகளை மதிப்பீடு செய்ய முடியவில்லை.ஏனெனில் கார்பேபெனெம்கள் மற்ற சோதனை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை விட சிறந்த குணப்படுத்தும் விகிதங்களை கொண்டிருந்த சில ஆய்வுகள் இருந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]

Tools
Information