பக்கவாத வகை பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகளில், ஒருபக்க கரங்களின் செயலிழப்பை குணப்படுத்துவத்துவதில், கட்டுப்படுத்துவதன் மூலம் தூண்டப்பட்ட இயக்க சிகிச்சை (CIMT) முறை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

குழந்தைகள் வழக்கமாக, பாதிக்கப்பட்ட கையை பயன்படுத்தாது இருப்பார்கள், எனவே இந்த சிகிச்சைமுறையில் இயல்பாக வேலை செய்யும் கையை கட்டுப்படுத்தி,பாதிக்கப்பட்ட கையை நோய் தீர்க்கும் நடவடிக்கைகளை செய்ய இந்த சிகிச்சை முறை ஊக்குவிக்கும். இரண்டு ஆய்வுகள், கட்டுப்படுத்துதல் மூலம் தூண்டப்பட்ட இயக்க சிகிச்சை(CIMT) மற்றும் கட்டாய பயன்பாட்டு சிகிச்சைமுறைகளுக்கு சாதகமான முடிவுகள் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மற்றொரு ஆய்வு ஒரு பக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாற்றப்பட்ட (CIMT) பலன் அளிக்ககூடும் என்று காண்பித்தது. இந்த ஆதாரங்கள் ஒரு சிறிய தெளிவற்ற ஆராய்ச்சி முறையம் மற்றும் அறிவிப்புமுறைகள் கொண்டு செயப்பட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனையும் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனை முலம் கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சை முறையை பரவலாக பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்க உயர்தர ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க.ஹரிஓம், வை. பிரகாஷ்,மோ. ந.தீபா மோகன்பாபு மற்றும் சி.இ.பி.என்.அர் குழு